ஆசிரியர் தகுதித் தேர்வு: 2012-ஆம் ஆண்டில் தேர்வு எழுதியவர்களுக்கும் சலுகை கோரி வழக்கு: அரசுக்கு நோட்டீஸ் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 27, 2014

ஆசிரியர் தகுதித் தேர்வு: 2012-ஆம் ஆண்டில் தேர்வு எழுதியவர்களுக்கும் சலுகை கோரி வழக்கு: அரசுக்கு நோட்டீஸ்


கடந்த 2012-ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் பங்கேற்றவர்களுக்கும் சலுகை கோரி தொடரப்பட்ட வழக்கு தொடர்பாக பதில் அளிக்குமாறு அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பி.மகேஸ்வரி உயர் நீதிமன்றத்தில்தாக்கல் செய்த மனு விவரம்:பி.எஸ்.சி., (வேதியியல்) மற்றும் பி.எட்., படித்துள்ளேன். கடந்த 2012-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 14-ஆம் தேதி நடந்த தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வில் பங்கேற்றேன். அதில், 150 மதிப்பெண்களுக்கு 85 மதிப்பெண் பெற்றேன். ஆனால், தேர்வில் தேர்ச்சி பெறவில்லை.இந்த நிலையில், ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான தேர்ச்சி மதிப்பெண்ணை 60 சதவீதத்திலிருந்து 55 சதவீதமாகக் குறைத்து தமிழகஅரசு கடந்த 6-ஆம் தேதி உத்தரவிட்டது.

அதில் 2013 ஆகஸ்ட் மாதத்தில் தேர்வு எழுதியவர்களுக்கும், எதிர் காலத்தில்தேர்வு எழுதுபவர்களுக்கும் தேர்ச்சி விகிதத்தில் இந்தத் தளர்வு வழங்கப்படும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன் மூலம் ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு தேர்ச்சி மதிப்பெண்ணாக 82 மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த நான் 2012-ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் 85 மதிப்பெண்கள் பெற்றுள்ளேன். 2013-ஆம் ஆண்டிலும், எதிர்காலத்தில் தேர்வு எழுதுபவர்களுக்கும் தேர்ச்சி விகிதத்தில் தளர்வு வழங்குவது போல், எனக்கும் தேர்ச்சி விகிதத்தில் தளர்வு வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டது.

இந்த மனு நீதிபதி ஆர்.சுப்பையா முன்பு புதன்கிழமை (பிப்.26) விசாரணைக்கு வந்தது. இந்த மனுவுக்கு இரண்டு வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.

15 comments:

  1. RELAXATIONku againsta each person case file pannuga because this illegal way of reduce Mark
    pls frnd case file against relaxation and weightage
    you make a unity and case file against relaxation

    ReplyDelete
    Replies
    1. 2012–ம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வு எழுதியவர்களுக்கும் மதிப்பெண்ணில்5 சதவீத சலுகை கேட்டு வழக்கு தாக்கல் தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு நோட்டீசு please contact cell 9842366268

      Delete
  2. Govt wil quickly think about TET 2012 & SUPPLEMENTARY TET 2012 5% relaxation for 82-89 scored candidates bcos the above both tet questions r tougher than tet 2013.

    High court too ordered to analyse what is the govt opinion about relaxation for old tet 2012. It can't b rejected by tn govt since they r more knowledgeable than present 82-89 tet 2013 candidates.

    Quickly G.O would b changed. Only allisnce party with AIADMK that us MARXIST COMMUNIST too raised voice for tet 2012 relaxation in tn govt assembly.

    Without following any inequality expecting that tn govt soon publish relaxation for tet 2012 & publish separate list of tet 2012 candidates. Most of them paased in 2012 compulsory present in 2013. But they 2012 wil given preference or appointed as separate selection list. It is the justice. This would b the hc decision.

    So before court delivers judgement, tn govt announces tet relaxation for 2012 before cv date. They wil kindly consider the hard work of affected candidates if 2012 since their total count(5% relaxation candidates from 82-89 in 2012) would b below 4000-5000.

    ReplyDelete
    Replies
    1. Siranjeevi sir Please give ur mobile number.I want to speak with u.I am also 2012 batch.I am waiting for ur valuable reply.
      anandakrish90@gmail.com

      Delete
    2. Siranjeevi sir, 2012 exams 2'umey kastam nu' solringa. adhulaye, neenga above 80 score panirukinga. 2013 exam common ah' ellarukumey easy nu' solringa.apo, adhu ungaluku rombavey easy ah' irundhirukum thaana? neenga above 120 eh' eduthrukalamey?

      Delete
    3. In 2012 number of vaccancy were more than number of eligible candidate i.e scored more than 90. Hence it was some logic to give relaxation in 2012. But but the situation become ulta. Number of vaccancy are lower than eligible candidates. Hence no need is arrised to relax the Mark. And no logic behind it except election.

      Delete
  3. How many history candidates passed? How many vacancies?expected cutoff?Anybody pls reply?

    ReplyDelete
  4. I request the candidate who had already filed writ petition seeking relaxation in 2012 itself kindly file writ appeal. If You do so justice will be obtained

    ReplyDelete
  5. ஏன் இப்படி மனசாட்சி இல்லாமல் பேசுகிறிர்கள்...2012 இல் 82 க்கு மேல் எடுத்துக்காட்டு உங்களால் ஏன் 2013 இல் 90 மதிபெண் பெற முடியவில்லை..சற்றும் உழைக்காமால் தேர்ச்சி பெற நினைப்பது எந்த விதத்தில் நியாயம்.நானும் கடந்த வருடம் 88 தான்.இப்பொழுது நீங்கள் கேட்கும் இந்த நியாயத்தை சென்ற வருடமே கேட்டிருந்தால் நானும் ஓரு வருடம் வேலைக்கு சென்றிருப்பேன்.,ஆனால் அன்று யாரும் கேட்க முன்வரவில்லை ஆனால் அதன் பின்பு மிகவும் வலியும் வேதனைகளையும் மனதில் சுமந்துகொண்டு இரவுபகல் பாராமல் படித்து இன்று தாள் 1 மற்றூம்2 இல் முறையே 98 மற்றும் 108 பெற்று வேலை வந்துவிடும் துன்பம் நீங்கும் என்று நினைத்தால் இப்படி அதிலும் 1008 முட்டுகட்டை போடும் உங்களை என்ன சொல்வது என்று தெரிய வில்லை...நீங்களாம் நல்லா இருப்பிங்க...

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சலுகை கொடுக்ககூடாது என்று போராட வேண்டியதுதானே 2013 க்கு சலுகை கொடுத்த govt 2012 க்கு கொடுத்தால் உங்களுக்கு கோபம் வருகிறது நண்பரே equal rights to all நானும் 2013இல் 90 மதிபென்னுக்கு மேல் பெற்றவன் தான்

      Delete
    2. Ithai kobam endru ninaithal athu ungal ariyamai...Lithuania end vali...

      Delete
    3. 2013 oru vaaipu kidaithum athai payan padithi koladhadhu yar thavaru ...

      Delete
  6. சமுக நீதி வேண்டி போராடுவோம்

    டெட்டில் தேர்ச்சி பெற்ற சான்றிதல் 7 வருடம் செல்லும்

    அவ்வாறு இருக்க 2012 இல் 82-89 வரை எடுத்தவர்களுக்கும் சலுகை வழங்குவதே நியாயமானது


    இதை எதிர்பவர்கள் 2013 இல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு போட்டியாக கருதுகிறார்கள்

    எது நியாயம் என்பது அனைவருக்கும் தெரிந்ததே

    இப்பொழுது இருக்கும் காலி பணியிடங்கள் கூட 2012 இல் மீதம் இருப்பவை தான்

    ReplyDelete
  7. சமுக நீதி வேண்டி போராடுவோம்

    டெட்டில் தேர்ச்சி பெற்ற சான்றிதல் 7 வருடம் செல்லும்

    அவ்வாறு இருக்க 2012 இல் 82-89 வரை எடுத்தவர்களுக்கும் சலுகை வழங்குவதே நியாயமானது


    இதை எதிர்பவர்கள் 2013 இல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு போட்டியாக கருதுகிறார்கள்

    எது நியாயம் என்பது அனைவருக்கும் தெரிந்ததே

    இப்பொழுது இருக்கும் காலி பணியிடங்கள் கூட 2012 இல் மீதம் இருப்பவை தான்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி