2013 டிசம்பர் நெட் தேர்வுக்கான ஆன்சர் கீ வெளியீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 24, 2014

2013 டிசம்பர் நெட் தேர்வுக்கான ஆன்சர் கீ வெளியீடு.


கடந்த 2013ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடத்தப்பட்டயு.ஜி.சி., நெட் தேர்வுக்கான ஆன்சர் கீ, அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

யு.ஜி.சி.,யின் இணைப்பு பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் ஆகியவற்றுக்கு தகுதிவாய்ந்த ஆசிரியர்களை தேர்வு செய்தவற்காக நடத்தப்படும் நெட் தேர்வு, ஆண்டிற்கு இருமுறை (ஜுன் மற்றும் டிசம்பர் மாதங்கள்) நடத்தப்படுகிறது.

அந்த வகையில் கடந்த 2013ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடத்தப்பட்ட தேர்வுக்கான ஆன்சர் கீ, தற்போது வெளியிடப்பட்டுள்ளது.www.ugcnetonline.inஎன்ற இணையதளம் சென்று அதைப் பார்க்கலாம். ஆன்சர் கீ -களுக்கான கேள்வித் தாள்கள், கீ மற்றும் ஆன்லைன் பீட்பேக் சிஸ்டம் ஆகியவை, வரும் மார்ச் மாதம் 3ம் தேதி வரை கிடைக்கப்பெறும். எனவே, தேர்வெழுதியவர்கள், தங்களின் feedback -களை, மார்ச் 3ம் தேதிவரை இடலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி