பார்வையற்ற ஆசிரியர்களுக்கு ஏப்.28-ல் சிறப்பு தகுதித்தேர்வு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 18, 2014

பார்வையற்ற ஆசிரியர்களுக்கு ஏப்.28-ல் சிறப்பு தகுதித்தேர்வு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு.


பார்வையற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஏப்ரல் 28-ம் தேதி சிறப்பு தகுதித்தேர்வு நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையில் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணியில் சேர வேண்டுமானால், ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்ட தகுதித்தேர்வில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள்55 சத வீதம் மற்றும் அதற்கு மேல் எடுத்து தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். இதற்கிடையே, பார்வையற்ற மாற்றுத் திறனாளி ஆசிரியர்களுக்கு சிறப்பு தகுதித் தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு ஏற்கெனவே அறிவித்திருந்தது. அவர்களுக்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆசிரியர்பயிற்சி நிறுவனம் (டயட்) மூலமாக பிரத்யேக பயிற்சி அளிக்கவும் அரசு ஏற்பாடுசெய்துள்ளது. 40 நாட்கள் கொண்ட இந்த பயிற்சியில் சேருவதற்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், பார்வையற்ற பட்டதாரி மாற்றுத்திறனாளிகளுக்கு ஏப்ரல் 28-ம் தேதி சிறப்பு தகுதித்தேர்வு நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இதற்கான விண்ணப்ப படிவங்கள் மார்ச் 5-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளின் அலுவல கங்களில் வழங்கப்படும். விண்ணப்ப கட்டணம் ரூ.50.சிறப்பு தகுதித்தேர்வுக்கு மார்ச் 25-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர்-செயலர் தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள சிறப்பு தகுதித்தேர்வு, பட்டதாரி ஆசிரியர்களுக்கு மட்டும் (தாள்-2) நடத்தப்படுகிறது. பொது வாக, ஒரு தேர்வு, சிறப்பு தேர்வாக நடத்தப் படும்போது அதில் தேர்ச்சி பெறுவதற்கு குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் குறைக்கப்படும். ஆனால், பார்வையற்ற ஆசிரியர்களுக்காக நடத்தப்பட உள்ள இந்த சிறப்பு தகுதித்தேர்வில் தேர்ச்சிமதிப்பெண்ணை குறைப்பது பற்றி ஒன்றும் தெரிவிக்கப்படவில்லை.

6 comments:

  1. நண்பர்களே இன்று தமிழில் டைப்பிங் செய்வது பற்றி நிறையபேர் கேட்டுருந்தீர்கள்...ஆனால் அந்த குறிப்பிட்ட மென்பொருளை ஜிமெயில் மூலம் அனுப்ப முடியவில்லை...இதற்காக வருந்துகிறேன்....ஆனால் அந்த மென்பொருளை தரவிறக்கம்(download) செய்யும் link கொடுத்துள்ளேன்...இந்த முறையில் நீங்கள் இணையதள இணைப்பு இல்லாமலே தமிழில் டைபிங் செய்ய முடியும்...அதுமட்டுமில்லாமல் நேரடியாக நமது கமெண்ட் பாக்ஸ் லையே டைபிங் செய்யலாம்....மற்றும் இதன் font அணைத்து விண்டோ விழும் இருக்க கூடியது என்பதால் இதை வேறு ஒரு கணினியில் படிக்க எந்த ஒரு பிரச்சினையும் இருக்காது.......

    1. just copy& past to download

    http://www.google.co.in/inputtools/windows/#

    2.அருகில் (right hand) வலது கை பக்கம் தமிழ் மொழியை குறியிட்டு
    3.agreement box ல் accept கொடுத்து download செய்யவும்...பின் இன்ஸ்டால் செய்யவும்......

    இன்ஸ்டால் ஆனா பின்பு எங்குவேண்டுமானாலும் alt +shift அழுத்துவதன் மூலம் மொழியை மாற்றலாம்....
    நன்றி...பயன்படுத்திவிட்டு கருத்துகளை சொல்லுங்கள்.....

    ReplyDelete
    Replies
    1. Ennoda mobile la install siya mudiyavillai

      Delete
    2. Ennoda mobile (gt 19100) la install seiya mudiyavillai.

      Delete
    3. Mobile la google play store la tamilvisai endra software download seithu install செய்யவும் u can.write both tamil &english

      Delete
    4. உஷா நீங்க உங்க மொபைலில் கூகிள் குரோம் இன்ஸ்டால் செய்து அதில் கூகிள் இன்புட் ...என்ற தளத்தை பார்வையிடுங்கள்...அதில் try it out என்று இருக்கும்..அதை கிளிக் செய்து அங்கு இங்கிலீஷ் என்ற இடத்தை கிளிக் செய்து தமிழ் என்று மாற்றி..நீங்கள் எப்போது போல் டைப் செய்தால் அது தமிழ் எழுத்துகளாக வரும்...அதை அப்படியே copy&past செய்து கொள்ளுங்கள்....

      Delete
  2. கை/கால் ஊனமுற்ற மாற்றுதிறனாளிகளின் கவனத்திற்கு,
    இந்த சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வு பார்வையற்ற மாற்றுதிறனாளிகளுக்கு மட்டுமே.இந்த சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வை கை/கால் ஊனமுற்ற மாற்றுதிறனாளிக்கும் நடத்திட வேண்டி நாங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்ய உள்ளோம்.எனவே கை/கால் ஊனமுற்ற B.Ed மாற்றுதிறனாளிகள் கீழ்கண்ட அழைபேசி எண்ணை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.மற்ற நண்பர்களும் உங்களுக்கு தெரிந்த கை/கால் ஊனமுற்ற B.Ed மாற்றுதிறனாளிகள் இருந்தால் தயவு செய்து சொல்லவும்.
    அழைபேசி எண் : 9965588748

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி