பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு புதிய பணியிடம் : கார் வைத்திருக்கும் ஆசிரியர்கள்"ரூட் அபீசர்' - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 24, 2014

பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு புதிய பணியிடம் : கார் வைத்திருக்கும் ஆசிரியர்கள்"ரூட் அபீசர்'


பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வில் புதிய பணியிடத்தை அரசு தேர்வுத்துறை தோற்றுவித்துள்ளது. இதில் கார் வைத்திருக்கும் ஆசிரியர்கள் "ரூட் ஆபீசர்களாக' நியமிக்கப்படவுள்ளனர்.
பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 3 ம் தேதி துவங்குகிறது.இதில் தேர்வு மையத்தில் புதிய பணியிடத்தை அரசு தேர்வுத்துறை தோற்றுவித்துள்ளது.இதில் தேர்வு மையங்களாக அனுமதிக்கப்பட்ட பள்ளியில் இதுவரை முதன்மை கண்காணிப்பாளர், துறை அலுவலர், எழுத்தர், இளநிலை உதவியாளர் ஆகியோர் பணியாற்றுவார்கள். இவர்கள் தேர்வுக்கு உரிய முன் ஏற்பாடுகளை கவனித்தல், தேர்வு அறை அமைப்பு, வினாத்தாள், விடைத்தாள் சேகரித்து அனுப்பும் பணியில் ஈடுபடுவார்கள். தற்போது தேர்வுத்துறை அந்தந்த மாவட்டங்களில் சொந்தமாக கார் வைத்திருக்கும் ஆசிரியர்கள் குறித்து கணக்கு எடுக்கப்பட்டு வருகிறது. கார் வைத்திருக்கும் ஆசிரியர்கள் "ரூட் ஆபீசர்களாக' நியமிக்கப்படுகின்றனர். இவருக்கு உதவியாளராக மற்றொரு ஆசிரியரும் நியமிக்கப்படவுள்ளனர். இந்த ரூட் ஆபீசர்கள் அருகருகே உள்ள இரண்டு, அல்லது மூன்று தேர்வு மையங்கள் இவர்களது பொறுப்பில் விடப்படும்.

கார் வைத்திருக்கும் ஆசிரியர் காரில் வினாத்தாள் கஸ்டோடியன் பாய்ண்டில் இருந்து வினாத்தாள்களை எடுத்து தேர்வு மையத்திற்கு உரிய நேரத்தில் கொண்டு சேர்ப்பார்கள், தேர்வு முடிந்தவுடன் விடைத்தாள்களை சேகரித்து உரிய மையங்களில் ஓப்படைக்க வேண்டும். இந்த பணிகளை ரூட் ஆபீசர்கள் செய்வார்கள். விடைத்தாள் காணாமல் போகாமல் இருக்கவும் முறையாக விடைத்தாள் திருத்தும் மையத்திற்கு அனுப்புவதற்காகவும், தேர்வுத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

3 comments:

  1. Aha.... "ROUTE THALA"....... Kilambiyachu.....

    ReplyDelete
  2. Aha.... "ROUTE THALA"....... Kilambiyachu.....

    ReplyDelete
  3. இங்கேயும் கார் வச்சுருந்தாத்தான மரியாதையோ ஏன் அரசுத்துரையில் வாகனங்களே இல்லையா வாடகைதான் கொடுக்க அரசிடம் பணம் தான் இல்லையா

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி