குரூப் - 4 முடிவு வெளியாவதில் கடும் இழுபறி: தேர்வெழுதிய, 12 லட்சம் பேரும், கடும் அதிருப்தி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 22, 2014

குரூப் - 4 முடிவு வெளியாவதில் கடும் இழுபறி: தேர்வெழுதிய, 12 லட்சம் பேரும், கடும் அதிருப்தி


குரூப் - 4 தேர்வு முடிவு வெளியாவதில், ஏழு மாதங்களாக இழுபறி நீடித்து வருவதால், தேர்வெழுதிய, 12 லட்சம் பேரும், தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.,) மீது,

கடும் அதிருப்தி அடைந்து உள்ளனர்.கடந்த ஆண்டு, ஆக., 25ல், குரூப் - 4 தேர்வு நடந்தது. 5,566 காலி இடங்களை நிரப்ப நடந்த தேர்வை, 12 லட்சம் பேர் எழுதினர். இதன் முடிவு, டிசம்பருக்குள் ?வெளியாகும் என, தேர்வர் எதிர்பார்த்தனர்.தேர்வாணைய தலைவர், நவநீதகிருஷ்ணனும், "இதோ, விரைவில் வருகிறது... ஜனவரி இறுதிக்குள் ?வளியிடுவோம்... பிப்ரவரியில் வந்துவிடும்' என, செல்லும் இடம் எல்லாம், பேட்டி கொடுத்தார். ஆனால், முடிவு மட்டும் வந்தபாடில்லை.

இந்த மாதத்துடன், ஏழு மாதம் முடியப்போகிறது. ஆனாலும், தேர்வு முடிவு, எப்போது வரும் என, தெரியாத நிலை உள்ளது. இம்மாத இறுதிக்குள் வருவதற்கு வாய்ப்பு இல்லை எனவும்,மார்ச், 15 தேதிக்குப்பின் ?வெளியாக வாய்ப்பு உள்ளது எனவும், தேர்வாணைய வட்டாரம் தெரிவிக்கிறது.முடிவு ?வெளியாவதில்,தொடர்ந்து இழுபறி நீடிப்பதால், தேர்வாணையம் மீது, தேர்வெழுதிய, 12 லட்சம் பேரும், கடும் அதிருப்தியில் உள்ளனர்.

5 comments:

  1. Better change the Tnpsc chairman,simply he is giving interview from October, November,December,January,Februaryhowmany days gone,there is no solution,before group4 exam group 3 junior inspector of co-operatives conducted August 3 2013,what's happening?

    ReplyDelete
  2. They how will know our problem????????????? because they are now retirement condition, youngster and without background people everyday sacrificed in social irritation. really that life my enemy also don't get.

    ReplyDelete
  3. I have checked in group4 questions for me 148 correct for me any chance?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி