அஇஅதிமுக தேர்தல் அறிக்கையை முதல்வர் ஜெ.ஜெயலலிதா வெளியிட்டார், ரூ.5 லட்சம் வரை ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்படும். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 25, 2014

அஇஅதிமுக தேர்தல் அறிக்கையை முதல்வர் ஜெ.ஜெயலலிதா வெளியிட்டார், ரூ.5 லட்சம் வரை ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்படும்.


ஜெயலலிதா வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில்,

* நதிகளை தேசிய மயமாக்கி, நதிகள் இணைப்பு திட்டம் செயல்படுத்தப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

* சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு தடுக்கப்படும் என்றும் அதிமுக உறுதியளித்துள்ளது.

* மேலும் வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கப்பட்டிருக்கும் கருப்பு பணத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

* கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.

* அரசியல் சட்டத்தின் 8- வது அட்டவணையில் உள்ள அனைத்து மொழிகளும் ஆட்சி மொழியாக்கப்படும்.

* இலங்கையில் தனி ஈழம் தேவையா என அறிய வாக்கெடுப்பு நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதற்காக இலங்கை மற்றும் வெளிநாடுகளில் வாழும் ஈழத்தமிழரிடையே வாக்கெடுப்பு நடத்த முயற்சி எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

* இலங்கையில் இனப்படுகொலை செய்தோர் சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவர். குற்றம் செய்தோருக்கு தண்டனை பெற்றுத் தரப்படும்.

* சட்டசபை, நாடாளுமன்றத்தில் மகளிருக்கு 33 சதவிகிதம் இடஒதுக்கீடு பெற்றுத்தர உறுதியளிக்கப்பட்டுள்ளது. மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

*மதச்சார்பின்மை கொள்கையை நிலைநாட்ட அதிமுக பாடுபடும்.

* மத்தியில் ஊழலற்ற அரசு அமைய அதிமுக உத்தரவாதம் தருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* ரூ.5 லட்சம் வரை ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்படும். சாதாரண மக்களும் பயன்பெறும் வகையில் வரிவிலக்கு அளிக்கப்படும்.

2 comments:

  1. Madam,
    Unga "target" yethu ngrathu unga therthal arikkaiyil thelivaga therigirathu.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி