அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் விரைவில் 600 விரிவுரையாளர்களும், அரசு பொறியியல் கல்லூரிகளில் 145 உதவி பேராசிரியர்களும் போட்டித் தேர்வு மூலம் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகிறது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 21, 2014

அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் விரைவில் 600 விரிவுரையாளர்களும், அரசு பொறியியல் கல்லூரிகளில் 145 உதவி பேராசிரியர்களும் போட்டித் தேர்வு மூலம் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகிறது.


தமிழ்நாட்டில் 41 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளும், 8 அரசு பொறியியல் கல்லூரிகளும் உள்ளன. பாலிடெக்னிக்குகளில் நேரடி நியமனமான விரிவுரையா ளர்களும், பொறியியல் கல்லூரிகளில்
உதவி பேராசிரியர்களும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் போட்டித் தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுகின்றனர்.

விரிவுரையாளர், உதவி பேராசிரியர் பதவிகளைப் பொருத்தமட்டில், பொறியியல், பொறியியல் அல்லாத ஆசிரியர் (ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல் போன்றவை)என 2 வகையாக இருக்கின்றன.

பாலிடெக்னிக் விரிவுரையாளர் பதவிக்கு பொறியியல் பாடங்களுக்கு முதல் வகுப்பு பி.இ. அல்லது பி.டெக். பட்டமும், பொறியியல் அல்லாத பாடங்களுக்கு முதல் வகுப்பு முதுகலை பட்டமும் பெற்றிருக்க வேண்டும்.பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர் பணியிடத்துக்கு பொறியியல் பாடத்துக்கு எம்.இ. அல்லது எம்.டெக். பட்டமும், பொறியியல் அல்லாத பாடங்களுக்கு முதல் வகுப்பு முதுகலை பட்டத்துடன் நெட் அல்லது ஸ்லெட் தேர்ச்சி அவசியம். பி.எச்டி. பட்டதாரியாக இருந்தால் நெட், ஸ்லெட் தேர்ச்சி தேவையில்லை. இந்த நிலையில், அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாகவுள்ள 600 விரிவுரை யாளர் பணியிடங்களும், அரசு பொறியியல் கல்லூரிகளில் 145 உதவி பேராசிரியர் பணியிடங் களும் விரைவில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் போட்டித் தேர்வுமூலமாக நிரப்பப்பட உள்ளன. பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத பாடங்களுக்கான காலியிடங்களும் இதில் இடம்பெற்றுள்ளன.இதற்கான அறிவிப்பை இந்த மாத இறுதியில் வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது.

பாலிடெக்னிக் விரிவுரையாளர் பதவிக்கு சம்பளம் ஏறத்தாழ ரூ.42 ஆயிரம் கிடைக்கும். பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கு தர ஊதியம் (கிரேடு பே) ரூ.600 அதிகம் என்பதால் அவர்கள், விரிவுரையாளர்களை காட்டிலும் கூடுதலாக ரூ.1000 சம்பளம்பெறுவர் என்பது குறிப்பிடத்தக்கது.

3 comments:

  1. the post published on the date of feb 21 and its given that the formal announcement will be at the end of feb month. But still there is no such announcement, WHY?

    ReplyDelete
  2. i am completed ma english what is the percentage of mark to eligible in lecturer

    ReplyDelete
  3. When will be announce the exam date

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி