6 கட்டங்களாக மக்களவைத் தேர்தல்? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 19, 2014

6 கட்டங்களாக மக்களவைத் தேர்தல்?


மக்களவைத் தேர்தல் தொடர்பான அறிவிப்பை மார்ச் மாதத்தில் வெளியிட தேர்தல் ஆணையம்திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.நாடு முழுவதும்

மொத்தம் ஆறு கட்டங்களாக மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவை நடத்தவும் தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து ஆந்திரா, ஒடிஷா மற்றும் சிக்கிம் மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தலையும் நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. மே 15ம் தேதிக்குள் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடத்திமுடிக்கப்பட்டு விடும் என்றும், இதனால், அடுத்த 2 வாரங்களுக்கு அரசியல் கட்சிகள் புதிய அரசை அமைக்க கால அவகாசம் கிடைக்கும் என்றும் தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மார்ச் 6ம் தேதிக்கு மேல், 10ம் தேதிக்குள் மக்களவைத் தேர்தலுக்கான அறிவிப்பை ஆணையம் வெளியிடும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி