இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு: தொலைதூரத்தில் கிடைத்ததால் வேலையில் சேர பலர் தயக்கம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 23, 2014

இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு: தொலைதூரத்தில் கிடைத்ததால் வேலையில் சேர பலர் தயக்கம்.


தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு அளிக்கும் கலந்தாய்வு ஆன்லைனில் நடந்தது. பலருக்கு தொலைதூர மாவட்டங்களில் பணி கிடைத்ததால் பதவி உயர்வை வேண்டாம்
என பலர் எழுதிக்கொடுத்து சென்றனர்.

அரசு மேல்நிலை மற்றும் உயர்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் 600 இடைநிலை ஆசிரியர்களுக்கு, பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு அளிக்கும் கலந்தாய்வு நேற்று நடந்தது. தமிழகத்தில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் முன்னிலையில் ஆன்லைன் மூலம் காலை 10 மணிக்கு தொடங்கியது.நெல்லை மாவட்டத்தில் 42 பேருக்கு மாநில அளவில் உள்ள காலி பணி இடங்கள் தெரிவிக்கப்பட்டு பதவி உயர்வு சான்றுகள் அளிக்கப்பட்டன. பலருக்கு கடலூர், வேலூர் என தொலைதூர மாவட்டங்களில் பணியிடம் கிடைத்தது. இதனால் பெண் ஆசிரியைகள் உள்ளிட்ட பலர் பதவி உயர்வு வேண்டாம் என எழுதி கொடுத்தனர். இவ்வாறு எழுதிக்கொடுத்தவர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு பதவி உயர்வு கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

இது போல் 2012ஆம் ஆண்டு தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய பட்டதாரி ஆசிரியர் தேர்வில் பங்கேற்று நீதிமன்ற உத்தரவு பெற்ற 105 பேருக்கு நேற்று பிற்பகல் ஆன்லைனில் கலந்தாய்வு நடத்தப்பட்டது.

3 comments:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி