சி.பி.ஐ. சப்-இன்ஸ்பெக்டர், அமலாக்க அதிகாரி தேர்வுக்கு வயது வரம்பு அதிகரிப்பு: ஓ.பி.சி., எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் பயன்பெறுவர் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 19, 2014

சி.பி.ஐ. சப்-இன்ஸ்பெக்டர், அமலாக்க அதிகாரி தேர்வுக்கு வயது வரம்பு அதிகரிப்பு: ஓ.பி.சி., எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் பயன்பெறுவர்


மத்திய அரசின் பல்வேறு துறை களில் குரூப்-பி நிலையிலான அதிகாரி பணியிடங்கள் நிரப்புவதற்கு பணியாளர் தேர்வாணையம் (ஸ்டாப் செலக் சன் கமிஷன்) ஒருங்கிணைந்த பட்ட தாரி நிலை தேர்வை நடத்துகிறது.
இதற்கான குறைந்தபட்ச கல்வித் தகுதியாக ஏதேனும் ஒரு பட்டப்படிப் பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு 18 முதல் 27-க்குள் இருக்க வேண்டும்.

மத்திய அரசின் இடஒதுக் கீட்டு விதிமுறையின்படி, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (ஓ.பி.சி.) 3 ஆண்டுகளும், எஸ்.சி., எஸ்.டி. பிரிவின ருக்கு 5 ஆண்டுகளும், மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் சலுகை அளிக்கப்படும்.இந்த நிலையில், பல்வேறு அமைச்சகங்கள், துறைகளில் உதவியாளர்கள் மற்றும் வருமானவரி ஆய்வாளர், கடத்தல் தடுப்பு அதிகாரி, ஆய்வாளர், உதவி அமலாக்கப்பிரிவு அதிகாரி, சி.பி.ஐ. சப்-இன்ஸ்பெக்டர், அஞ்சல்துறை ஆய்வாளர், கணக்காளர், புள்ளியியல் ஆய்வாளர் (கிரேடு-2) உள்ளிட்ட பதவிகளில் காலியிடங்களை நிரப்ப ஸ்டாப் செலக்சன் கமிஷன் ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை தேர்வுக்கான அறி விப்பை கடந்த வாரம் வெளியிட்டது.இதற்கான முதல்கட்ட தேர்வு ஏப்ரல் 27, மே 4-ம் தேதிகளில் நடத்தப்பட இருக்கிறது.

தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி கடந்த 14-ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், ஸ்டாப் செலக்சன் கமிஷன் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, சி.பி.ஐ. சப்-இன்ஸ்பெக்டர், உதவி அமலாக்கப்பிரிவு அதிகாரி பணிகளுக்கு வயது வரம்பை 3 ஆண்டுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த இரு பணிகளுக்கு மட்டும் வயது வரம்பை 27 லிருந்து 30 ஆக உயர்த்தியுள்ளது.

கல்வித்தகுதியில் மாற்றம்

இதேபோல், புள்ளியியல் ஆய்வா ளர் (கிரேடு-2) பணிக்கு வயது வரம்பு 26-லிருந்து 32 ஆக அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. அதோடு முக்கிய அம்சமாக இந்த பதவிக்கான கல்வித்தகுதி யிலும் மாற்றம் கொண்டுவரப் பட்டுள்ளது.

விண்ணப்ப காலஅவகாசம்

மேற்கண்ட 3 பதவிகளுக்கு வயது வரம்பு அதிகரிக்கப்பட்டிருப்பதால், பொதுப்பிரிவினர், ஓ.பி.சி., எஸ்.சி., எஸ்.டி. உள்ளிட்ட அனைத்து வகுப்பினரும் பெரிதும் பயன்பெறுவர்.வயது வரம்பு அதிகரிப்பு, கல்வித்தகுதி மாற்றம் காரணமாக, ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி முதல் பகுதி (பார்ட்-1) தேர்வுக்கு பிப்ரவரி 22-ம் தேதி வரையும், பகுதி-2 தேர்வுக்கு பிப்ரவரி 24-ம் தேதி வரையும் நீட்டிக்கப்பட்டுள்ளது. பணியாளர் தேர்வாணையத்தின் (www.ssconline.nic.in) இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி