மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 28, 2014

மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு.


இன்று கூடிய மத்திய அமைச்சரவை கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப் படி 10 சதவிகிதம் அதிகரிக்கப்பட்டு 100 சதவிகிதம் ஆக்கப்பட்டுள்ளது. மேலும்
இம்முடிவால்
50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பலன் பெறுவார்கள்.
மேலும் 30 லட்சம் ஓய்வூதியதாரர்களும் இதனால் பலன் பெறுவார்கள்.

மேலும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி சந்தாதாரர்களுக்கு குறைந்த பட்ச ஓய்வூதிய வரம்பை ஆயிரம் ரூபாயாக உயர்த்தவும் அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்தது. இதன் மூலம் உடனடியாக 28 லட்சம் சந்தாதாரர்கள் பலன் அடைவார்கள்.இபிஎஸ் - 95 திட்டத்தின் கீழ் வரும் சந்தாதாரர்களுக்கு இப்பலன் கிடைக்கும்.இத்திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசுக்கு வரும் நிதி ஆண்டில் மட்டும் 1,217 கோடி ரூபாய் கூடுதலாக தேவைப்படும்.

யூரியாவுக்கான உற்பத்தி விலையை டன்னுக்கு 350 ரூபாய் அதிகரிக்கவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. யூரியா உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் முதலீட்டுக் கொள்கையில் மாற்றம் ஏற்படுத்தவும் ஒப்புதல் தரப்பட்டது.

2 comments:

  1. Authenticate News from CNN-IBN

    Eyeing Lok Sabha polls, Cabinet hikes DA of 50 lakh Central employees
    Arunima,CNN-IBN | Feb 28, 2014 at 02:06pm IST

    New Delhi: With an eye on Lok Sabha elections, the Union Cabinet approved a hike in dearness allowance (DA) to 100 per cent from existing 90 per cent benefiting 50 lakh Central government employees and 30 lakh pensioners. The DA hike though, will not be merged with the basic pay.
    The Cabinet in its last meeting before the Lok Sabha elections, also approved Rs 1,000 per month as the minimum pension for the non-government staff under the EPFO scheme.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி