நிறுத்தி வைத்த பதவி உயர்வு: உடனடியாக வழங்க ஆசிரியர்கள் கோரிக்கை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 16, 2014

நிறுத்தி வைத்த பதவி உயர்வு: உடனடியாக வழங்க ஆசிரியர்கள் கோரிக்கை.


தொடக்கக் கல்வித் துறையில், நிறுத்தி வைக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வை வழங்க வேண்டும், என்று கோரிக்கை எழுந்துள்ளது.தொடக்கக் கல்வித் துறையில்,
ஆண்டுதோறும், தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு, பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு உள்ளிட்டவை வழங்கப்படும். கடந்த, 2013ம் ஆண்டு மே மாதத்தில் நடந்த ஆசிரியர் பணியிட மாறுதல் கவுன்சிலிங்கில், நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு வழங்கப்பட்டது. அப்போது, சென்னை உயர்நீதிமன்றத்தில், இரட்டை பட்டம் தொடர்பான வழக்கு நிலுவையில் இருந்ததால், பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு நிறுத்தப்பட்டது. இதனால், பதவி உயர்வு கிடைக்காதபட்டதாரி ஆசிரியர் பலரும், பணியிட மாறுதல் பெற முடியாமல் அவதிக்கு உள்ளாகினர். இந்நிலையில், கடந்த வாரம், இரட்டை பட்டம் தொடர்பான வழக்கு முடிவுக்கு வந்தது. இதன் காரணமாக, நிறுத்தி வைக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வை, உடனடியாக நடத்தி முடிக்க வேண்டும், என தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:

பணியிட மாறுதல் நடைபெறும் ஒவ்வொரு முறையும், நீதிமன்ற வழக்கு நிலுவையில் இருப்பதை காரணம் காட்டி, பதவி உயர்வு மறுக்கப்பட்டுவந்தது. தற்போது, வழக்கு முடிவுக்கு வந்து, பல நாட்களாகியும், பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வுக்கு, தொடக்கக் கல்வித் துறையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், பதவி உயர்வை எதிர்நோக்கியுள்ள ஆசிரியர்கள் கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளனர். லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால், இந்த கல்வியாண்டில் பதவி உயர்வு வழங்கவே முடியாத நிலை உருவாகும். இதனால், உடனடியாக நிறுத்தி வைக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வை வழங்க, ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி