"லாங் லீவ்' ஆசிரியர்கள்: தேர்வு நேரத்தில் மாணவர்கள் அவதி. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 25, 2014

"லாங் லீவ்' ஆசிரியர்கள்: தேர்வு நேரத்தில் மாணவர்கள் அவதி.


தேர்வு நெருங்கும் சமயத்தில், அரசு பள்ளி ஆசிரியர்கள் பலர், தங்கள் குழந்தைகளின் படிப்புக்காக, வாரக்கணக்கில், "லாங் லீவ்' போடுவதால், அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வித் தரம் கேள்விக்குறியாகியுள்ளது. தமிழகத்தில்,

பிளஸ் 2 பொதுத் தேர்வு, மார்ச், 3ம் தேதி துவங்குகிறது. இந்த நேரத்தில், பிளஸ் 2மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வெழுதும் மாணவர்களின் பெற்றோராக உள்ள அரசுப் பள்ளி ஆசிரியர்கள், ஒரு மாதம் வரை, மெடிக்கல் லீவ் எடுத்து, தங்கள் குழந்தைகளை தேர்வுக்கு தயார் செய்யும் பணியில் ஈடுபடுகின்றனர். ஒவ்வொரு அரசு பள்ளியிலும், ஒன்றிரண்டு ஆசிரியர்கள், இது போன்று, "லாங் லீவில்' சென்றுள்ளனர். தேர்வு நேரத்தில், லீவ் விண்ணப்பித்தால், பிரச்னை வரும் என்பதால், முன்கூட்டியே, பெரும்பாலான ஆசிரியர்கள், விடுப்பு விண்ணப்பங்களை அளித்துள்ளனர்.

இதுகுறித்து, அரசுப் பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது: தேர்வு நேரங்களில், அவசியமான காரணம்இல்லாவிட்டால், மெடிக்கல் லீவ் அனுமதிக்கக் கூடாது என, அரசின் அறிவிப்பு இருந்தும்,கல்வித் துறை அதிகாரிகளையும், பள்ளியின் தலைமை ஆசிரியர்களையும், "கவனித்து' லீவ்எடுத்துக்கொள்கின்றனர்.தங்கள் குழந்தையின் படிப்புக்காக, விடுப்பு எடுக்கும் இவர்கள், இதனால், அரசுப் பள்ளி மாணவர்கள், பாதிக்கப்படுவதை கண்டு கொள்ளாமல் இருப்பது வேதனையளிக்கிறது.தேர்வு நேரத்தில் ஆசியர்களுக்கு, "லாங் லீவ்' வழங்குவதை நிறுத்த, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி