இடைநிலை ஆசிரியர் சம்பள முரண்பாட்டினை நீக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டு, இரண்டு வாரத்தில் பதில் அளிக்க அரசுக்கு வாய்ப்பு !!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 16, 2014

இடைநிலை ஆசிரியர் சம்பள முரண்பாட்டினை நீக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டு, இரண்டு வாரத்தில் பதில் அளிக்க அரசுக்கு வாய்ப்பு !!!


SSTA சார்பாக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் சென்ற ஆண்டே தொடுக்கப்பட்ட வழக்கினை யாவரும் அறிவீர்கள்.அந்த வழக்கினை விசாரணைக்கு மீண்டும் கொண்டு வருவதில் சரியான நீதிமன்ற நடைமுறைப்படி முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்திலும் தன் கணக்கினை கனகச்சிதமாக, உண்மையை மூலதனமாக, மேலும் உச்சநீதிமன்ற அனுபவத்தை கொண்டு வெள்ளிக்கிழமை கோர்ட் எண்:11இல் வரிசை எண்: 80 ஆக நீதியரசர்.திரு. சுப்பையா அவர்களிடம் விசாரணைக்கு வந்தது. மரியாதைக்குரிய அரசு வழக்கறிஞர் திரு.விஜயகுமார் அவர்கள் ஆஜரானார்கள். நம்முடைய சார்பில் மூத்த மற்றும் பல கல்வித்துறை சமந்தமான வழக்குகளில் சாதகமான தீர்ப்பினை மனுதாரருக்கு பெற்றுத்தந்த வழக்கறிஞர் திரு.செல்வராஜ் அவர்கள் ஆஜராகி வாதாடினார். நீதியரசர் அரசின் நிலைப்பாடு என்ன? எனக் கேட்டபோது, இன்னும் இரண்டு வாரத்தில் அரசினை கலந்து பதில் மனு தாக்கல் செய்கிறோம் என சொல்லியதை ஏற்றுக்கொண்ட நீதியரசர் அவர்கள் , இரண்டு வாரம் வழக்கினை ஒத்திவைத்தார்.

2 comments:

  1. ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படும் ஆசிரியர் நலனுக்காக பாடுபடும் சங்கம் , ஏற்கனவே ஆளும் கட்சியாக இருந்தவர்களுக்கு ஆதரவாக செயல்படும் சங்கம் இப்படி பல கட்சிகளின் தலைமைக்கு நெருக்கமாக செயல்படும் சங்கங்கள் இருந்தும் நீதிமன்றத்திற்கு சென்றுதான் தங்களின் உரிமைகளை பெற வேண்டிய அவல நிலை இந்த திருநாட்டில் மட்டுமே அரங்கேறும்.

    ReplyDelete
  2. வெற்றி நமக்கே.நன்றி டாடா சங்கத்திற்கு

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி