பள்ளி முதல் ஆராய்ச்சி படிப்பு வரை மத்திய அரசு உதவித்தொகை கிடைக்காமல் மாணவர்கள் தவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 26, 2014

பள்ளி முதல் ஆராய்ச்சி படிப்பு வரை மத்திய அரசு உதவித்தொகை கிடைக்காமல் மாணவர்கள் தவிப்பு.


தமிழகத்தில் 2013-14ம் கல்வி ஆண்டில் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு படிக்கும் ஆதிதிராவிட மற்றும் பழங்குடி மாணவர்கள் 7 லட்சத்து 23ஆயிரம் பேர் மத்திய அரசின் கல்வி உதவித் தொகை கேட்டு விண்ணப்பித்துள்ளனர்.
கல்வியாண்டின் இறுதி கட்டத்துக்கு வந்துவிட்ட நிலையில், தமிழக மாணவர்களுக்கு வழங்க வேண்டிய ஸீ549 கோடி இன்னும் வழங்கப்படாமல் உள்ளது. ஆராய்ச்சி படிப்பை (எம்.பிஎல், பி.எச்டி) மேற்கொண்டுள்ளவர்களுக்கும் யூஜிசி மூலம் மத்திய அரசு உதவித் தொகை வழங்கி வருகிறது. இதுவும் பல மாதங்களாகியும் கிடைக்காத நிலையே நீடிக்கிறது. 5 வருட ஆராய்ச்சி படிப்பில் பொதுப்பிரிவில் தேர்வாகும் மாணவர்களுக்கு முதல் 2 ஆண்டுக்கு மாதந்தோறும் ஸீ16 ஆயிரமும், அடுத்த 3 ஆண்டுக்கு மாதந்தோறும் ஸீ18ஆயிரமும் வழங்கப்படுகிறது. இதோடு புத்தகம் வாங்க, வீட்டுப்படி உள்ளிட்ட இதர செலவுக்கு குறைந்தபட்சம் ஸீ10 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது. தேசிய அளவில் தேர்வு செய்யப்பட்டு, ஸ்காலர்ஷிப் பணம் இறுதி செய்யப்பட்ட பிறகே பல்கலைக்கழகங்களில் சேர்க்கை நடக்கிறது. இவ்வாறு சேர்ந்த மாணவர்கள் பலரும் ஆராய்ச்சி படிப்பை முடிக்கும் நிலைக்கு வந்துவிட்டனர். ஆனால் ஸ்காலர்ஷிப் மட்டும் கிடைத்தபாடில்லை.திண்டுக்கல்லைச் சேர்ந்த ஆராய்ச்சி மாணவி கூறுகையில், முதல் 8 மாதங்களுக்கு பணம் வழங்கப்பட்டது. தற்போது 4 ஆண்டில் முதுநிலை ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளேன்.

இளநிலையில் 18 மாதங்களும், முதுநிலையில் 24 மாதங்களும்எனக்கு உதவித் தொகை வரவேண்டி உள்ளது. எல்லாம் சேர்த்து ஸீ6 லட்சம் வரையில் எனக்கு மட்டும் பணம் வழங்க வேண்டும். பல்கலைக்கழகங்களின் அலட்சியம் தான் இதற்கு காரணம். ஆராய்ச்சிக்கு தேவையான பணத்தை திரட்டுவதிலேயே அதிக நேரம் செலவாகி விடுகிறது. பலரும் நகைகளை அடகுவைத்து ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். எனவே ஆராய்ச்சி கல்வி முடிவதற்குள் கல்வி உதவி தொகை கிடைக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி