தமிழகத்தில் உயர்ந்துவரும் சி.பி.எஸ்.இ., பள்ளிகளின் எண்ணிக்கை! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 24, 2014

தமிழகத்தில் உயர்ந்துவரும் சி.பி.எஸ்.இ., பள்ளிகளின் எண்ணிக்கை!


தமிழகத்தில், கடந்த ஒரு ஆண்டில் மட்டும், சுமார் 80 புதிய பள்ளிகள், சி.பி.எஸ்.இ., அமைப்புடன் இணைந்துள்ளன. இதன்மூலம், சி.பி.எஸ்.இ., வாரிய பள்ளிகளின் நாடு முழுவதுமான மொத்த எண்ணிக்கை

14,841 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தைப் பொறுத்தவரை, பல பெற்றோர்கள், தங்களின் பிள்ளைகள் மாநில வாரியத்தில் படிப்பதை விட, சி.பி.எஸ்.இ., வாரியத்தில் படிப்பதையே விரும்புகின்றனர். எனவே, மாநிலத்தின் பல பள்ளிக் குழுமங்கள், தங்களின் சில பள்ளிகளை மாநில கல்வி வாரிய அடிப்படையிலும், சில பள்ளிகளை சி.பி.எஸ்.இ., கல்வி வாரிய அடிப்படையிலும் நடத்துகின்றன.மாநில வாரியத்தில் படிக்கும் மாணவர்களுக்கென்று சில குறிப்பிட்ட நன்மைகள் கிடைக்கின்றன.

சி.பி.எஸ்.இ., கல்வியோடு ஒப்பிடும்போது அதிக மதிப்பெண்களை சற்று எளிதாகப் பெறுதல், மாநில உயர்கல்வி நிறுவனங்களில் சேர முயற்சிக்கும்போது முன்னுரிமை பெறுதல் உள்ளிட்ட பல சலுகைகள் கிடைக்கின்றன.அதேசமயம், சி.பி.எஸ்.இ., கல்வியிலும் சில சலுகைகள் உண்டு. தமிழகத்தைப்பொறுத்த வரையில், 2013 - 2014ம் கல்வியாண்டில் 499 பள்ளிகள் சி.பி.எஸ்.இ., இணைப்பு பெற்றவையாக உள்ளன. சென்னையில் மட்டும்122 பள்ளிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

2 comments:

  1. All schools in Tamil Nadu run by Private Sector people. They don't give respect to CTET qualified teacher. But in Tamilnadu TET qualified teachers are getting secured job with more scale of pay. We CTET qualified teachers working in PVt sector with less pay. What a disparity,

    ReplyDelete
  2. பெற்றோர்களிடம் இருக்கும் பணத்தை எப்படியாவது பிடுங்கிவிட வேண்டும்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி