வேலை வேண்டுமா? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 17, 2014

வேலை வேண்டுமா?


போலீஸ்

வேலைமத்திய ரிசர்வ் போலீஸ் (சி.ஆர்.பி.எஃப்) அசிஸ்டண்ட் சப் இன்ஸ்பெக்டர் பதவியில்ஸ்டெனோ வேலைக்கு 271 காலியிடங்கள் உள்ளன. ஆண், பெண் இரு பாலினரும் விண்ணப்பிக்கலாம்.
இதற்கான கல்வித் தகுதி பிளஸ் டூ. அத்துடன் போலீஸ் வேலைக்கான உயரம், மார்பளவு, எடை ஆகியவற்றில் குறிப்பிட்ட தகுதிகள் தேவை. 18 வயது முதல்25 வயது உள்ளவர்கள் விண்ணபிக்கலாம். திறனறித் தேர்வுதான் இதில் முக்கியமானது. 10 நிமிடத்தில் 80 வார்த்தைகளைத் தட்டச்சு செய்யவும், கம்ப்யூட்டரில் டைப் செய்யவும் தெரிந்திருக்க வேண்டும். அத்துடன் எழுத்துத் தேர்வு, உடல் தகுதித் தேர்வு, மருத்துவப் பரிசோதனைகளில் பங்கேற்க வேண்டும். இவற்றில் தேர்ச்சி பெற்றால் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் பிப்ரவரி 22. கூடுதல் தகவல்களுக்கு: www.crpf.gov.in

ராணுவத் தொழிற்சாலை வேலை

திருச்சியில் உள்ள ராணுவ ஆயுதத் தொழிற்சாலையில் குரூப் சி பிரிவில் 30 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதில் பிற்படுத்தப் பட்டோர் பிரிவு 15, திறந்த நிலை பிரிவு 15. ஆக மொத்தம் 30. மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இதற்குள் உள் இடஒதுக்கீடு உண்டு. வயது வரம்பு 18 முதல் 32 வரை. வயது வரம்பில் தளர்ச்சி உண்டு. கல்வித் தகுதி, பத்தாம் வகுப்பு. விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் பிப்ரவரி 21. ஆன்லைனிலும் விண்ணப்பிக்கலாம்.

கூடுதல் தகவல்களுக்கு: www.oftdr.com

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி