இன்றும், நாளையும் ஆசிரியர் ஸ்டிரைக் காரணமாக பள்ளிகளை மூடக்கூடாது: கல்வித்துறை உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 25, 2014

இன்றும், நாளையும் ஆசிரியர் ஸ்டிரைக் காரணமாக பள்ளிகளை மூடக்கூடாது: கல்வித்துறை உத்தரவு


ஆசிரியர் தகுதித்தேர்வை ரத்து செய்ய வேண்டும், மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் இடைநிலை ஆசிரியர்களுக்கும் வழங்க வேண்டும், பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்,

தொடக்க கல்வியில் தமிழ்வழிகல்வி முறையை தொடர வேண்டும் என்பது உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து மாவட்டங்களிலும் தமிழ்நாடு தொடக்க பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இதன் தொடர்ச்சியாக இன்று கோரிக்கை அட்டை அணிந்து தொடக்க கல்வி ஆசிரியர்கள் தமிழகம் முழுவதும் உள்ளிருப்பு வேலைநிறுத்த போராட்டம் நடத்த உள்ளனர். மேலும் 26ம் தேதி ஒரு நாள் அடையாள வேலைநிறுத்த போராட்டம் நடைபெற உள்ளது. இந்தநிலையில் ஆசிரியர்கள் வேலைநிறுத்த போராட்டம் காரணமாக பள்ளிகளை மூடக்கூடாது என்று மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களுக்கு அதன் இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.இதுதொடர்பான உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது : தமிழ்நாடு தொடக்க பள்ளி ஆசிரியர்கூட்டணி பிப்ரவரி 25ம் தேதி நடத்த உள்ள உள்ளிருப்பு போராட்டம் மற்றும் 26ம் தேதி அடையாள வேலை நிறுத்தத்தின் காரணமாக எந்த பள்ளிகளும் மூடப்படக்கூடாது.

அனைத்து பள்ளிகளும் இந்த நாட்களில் முழுமையாக செயல்படும் விதத்தில் மாற்று பணியில் மற்ற பள்ளிகளில் இருந்து வேலைநிறுத்தத்தில் கலந்து கொள்ளாத ஆசிரியர்களை கொண்டும் எழுத்து பூர்வமாக ஆணை அளித்து ஆசிரியர்களை அமர்த்த வேண்டும். இத்தகைய மாற்று பணிக்கு ஆசிரியர் பயிற்றுநர்களை பயன்படுத்திக் கொள்ளலாம். மாற்று பணியில் அமர்த்தப்பட்டு பள்ளிக்கு செல்லாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்க வேண்டும்.இரு நாட்களிலும் வேலைநிறுத்தத்தில் கலந்து கொள்பவர் பட்டியலை காலை 10 மணிக்குள் இயக்குநருக்கு இமெயில் மூலம் அனுப்ப வேண்டும். போராட்ட தினங்களில் பள்ளிகள் அனைத்தும் செயல்பட்டு சுமூகமான சூழ்நிலை நிலவும் விதத்தில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

உதவி, கூடுதல் தொடக்க கல்வி அலுவலர்கள் முழு பொறுப்பேற்று தமது கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகள் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறுஉத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி