உதவி வேளாண்மை அலுவலர் காலிப்பணியிடங்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தேர்வின் மூலம் நிரப்பப்படும். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 20, 2014

உதவி வேளாண்மை அலுவலர் காலிப்பணியிடங்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தேர்வின் மூலம் நிரப்பப்படும்.


உதவி வேளாண்மை அலுவலர் காலிப்பணியிடங்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வின் மூலம் நிரப்பப்படும் என்று தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது.
வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் முதன்மைச்செயலாளர் சந்தீப் சக்சேனா வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:–

தமிழக அரசுக்கு வேளாண்மை ஆணையர் கடிதம் எழுதினார். அதில், உதவி வேளாண்மை அலுவலர் காலிப்பணியிடம் 2011–12–ம் ஆண்டிற்கு 417 என்று மதிப்பீடு செய்து அரசால் ஒப்புதல் அளிக்கப்பட்டு நேரடி நியமனம் செய்ய உத்தரவிடப்பட்டது.2009 மற்றும் 2011–ம் ஆண்டுகளில் அந்த பணியிடங்கள் வேலைவாய்ப்பகம் மூலம் நேரடியாக நிரப்பப்பட்டது. தற்போது திறமையான, மேம்பட்ட மற்றும் இளையோருக்கு வாய்ப்பளிக்கும் விதத்தில், போட்டித்தேர்வு மூலம் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நியமனம் மேற்கொண்டால் சிறப்பாக அமையும்.

மேலும் மாநில முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான தகுதியானவர்கள் அனைவரும் பங்கேற்கும் விதத்தில் தமிழ்நாடுஅரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு மேற்கொள்வது உகந்ததாக இருக்கும். இந்த உதவி வேளாண்மை அலுவலர் பணிநியமனத்தினை தமிழ்நாடு தேர்வாணையத்தின் எல்லைக்குள் கொண்டு வந்து,417 உதவி வேளாண்மை அலுவலர் பணியிடங்களை நிரப்பிட ஆணை வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.இதுகுறித்து, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வணையத்தின் ஆலோசனை கோரப்பட்டது. இந்த பணியிடங்களை தேர்வாணையத்தின் எல்லைக்குள் கொண்டுவந்து, 417 உதவி வேளாண்மை அலுவலர் பணியிடங்களை தமிழ்நாடு அரசுபணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நிரப்ப இசைவு தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேளாண்மை ஆணையரின் கருத்தை அரசு கவனமுடன் பரிசீலித்து, அந்த பணியிடங்களைதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நிரப்பலாம் என முடிவு செய்து அரசாணை வெளியிடப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இது சம்பந்தமாக, தமிழ்நாடு அரசு பணி விதிகளில் திருத்தம் கொண்டு வருவதற்கான அறிவிப்பாணையும் வெளியிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி