இரட்டைப்பட்டம் வழக்கில் உச்ச நீதி மன்றத்தில் அடுத்த வாரம் SLP தாக்கல். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 21, 2014

இரட்டைப்பட்டம் வழக்கில் உச்ச நீதி மன்றத்தில் அடுத்த வாரம் SLP தாக்கல்.


இரட்டைப்பட்டம் வழக்கு சென்னை உயர்நீதி மன்றத்தில் தள்ளுபடி ஆனதால் வழக்கை உச்சநீதி மன்றம் கொண்டு செல்ல வழக்கின் ஒருங்கிணைப்பாளர்கள் கடந்த 18.2.2014 அன்று சென்னையில் வழக்குரைஞரை சந்தித்தனர். இச்சந்திப்பிற்கு பின்
நம்மை தொடர்பு கொண்ட ஒருங்கிணைப்பாளர்கள் வழக்கை உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்வதில் உறுதியாக உள்ளதாகவும், அடுத்த வாரம் உச்ச நீதி மன்றத்தில் தாக்கல் செய்ய வழக்குரைஞருடன் புதுதில்லி செல்லவிருப்பதாகவும் அப்பொழுது சிறப்பு விடுப்பு மனு தாக்கல் செய்யப்படும் எனவும் நம்மிடம் தெரிவித்தனர்.

தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களும் இணைப்பு:

இந்த வழக்கில் தகுதி தேர்வில் வெற்றி பெற்ற இரட்டைப்பட்டம் பெற்றவர்கள் 10 பேர் இணைந்துள்ளனர். இவர்கள் தாங்கள் பணி நியமனம் பெறும்பொழுது இடைக்கால தீர்ப்பால் பாதிக்கப்பட்டவர்கள். இவ்வழக்கு இவர்களுக்கு வாழ்வாதார பிரச்சனை என்பதால் மிகவும் ஆர்வமுடன் இதில் பங்கெடுத்துள்ளதாக ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.

3 comments:

  1. Plse, We can obey the judgement and try to get degree in three years which is eligible for promotion.

    ReplyDelete
  2. அப்போதைக்கு judgement என்னனு பார்ப்போம்

    ReplyDelete
  3. Double degree case waste....case pottu suthura nerathula padichu mudichulam.....money waste...time waste.....but judgement onnuthan.....maaraadhu......

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி