தேர்தல் ஆணையம் மனு: ஜனவரி 1ம் தேதி 18 வயது முடிந்தவர்களுக்கே வாக்குரிமை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 20, 2014

தேர்தல் ஆணையம் மனு: ஜனவரி 1ம் தேதி 18 வயது முடிந்தவர்களுக்கே வாக்குரிமை.


இந்த ஆண்டு ஜனவரி 1ம் தேதி 18 வயது நிரம்பியவர்கள் மட்டுமே வாக்களிக்க முடியும் என்று தேர்தல் ஆணையம் உயர் நீதிமன்றத்தில் பதில் அளித்துள்ளது.
சென்னையை சேர்ந்த அக்ஷ்யகுமார் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் எனக்கு கடந்த மார்ச் மாதத்துடன் 18 வயது முடிந்துவிட்டது. வாக்கு அளிக்கும் உரிமை உள்ளது. ஆனால், தேர்தல் ஆனையம் என் மனுவை ஏற்கவில்லை.எனக்கு வாக்களிக்க அனுமதி தர வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த மனுவை நீதிபதி பால்வசந்தகுமார், சத்தியநாராயணன் ஆகியோர் விசாரித்தனர்.அப்போது தேர்தல் ஆணையம் சார்பாக மூத்த வக்கீல் ஜி.ராஜகோபால் ஆஜராகி, ஜனவரி 1ம் தேதி அன்று 18 வயது பூர்த்தி அடைந்தால்தான் சட்டப்படி வாக்குரிமை வழங்க முடியும். மனுதாரருக்கு மார்ச் மாதம்தான் பூர்த்தியாகியுள்ளது. ஆண்டு தோறும் ஜனவரி 1ம் தேதி 18 வயது ஆனவர்களுக்கு வாக்களிக்க உரிமை வழங்கப்படும். எனவே மனுவை தள்ளுபடி செய்யவேண்டும் என்றார்.இதை நீதிபதிகள் ஏற்று வழக்கை தள்ளுபடி செய்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி