10ம் வகுப்பு தமிழ் முதல்தாளில் எழுத்து பிழை: மாணவர்கள் அதிர்ச்சி. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 27, 2014

10ம் வகுப்பு தமிழ் முதல்தாளில் எழுத்து பிழை: மாணவர்கள் அதிர்ச்சி.


நேற்று நடந்த, பத்தாம் வகுப்பு தமிழ் முதல்தாளில், எழுத்துப்பிழை இருந்ததால், மாணவர்கள் குழப்பமும், அதிர்ச்சியும் அடைந்தனர்.
தமிழகத்தில், 10 வகுப்பு பொதுத்தேர்வு நேற்று நடந்தது. முதன்முதலாக பொதுத்தேர்வை சந்திக்கும் பதட்டத்துடன் பங்கேற்ற மாணவ, மாணவியருக்கு, முதல் தேர்விலேயே அதிர்ச்சி காத்திருந்தது. தமிழ் முதல்தாள் தேர்வில், 26வது கேள்வியாக கேட்கப்பட்ட,"வேந்தற்குரிய பொருள் யாது' என்ற கேள்வியில், "வேந்தர்க்குரிய' என அச்சிடப்பட்டிருந்தது. அதே போல், 49, இ கேள்வியில், "மீள் நோக்கும்' எனத்தொடங்கும் நாலாயிர திவ்ய பிரபந்த பாடல் என கேட்பதற்கு பதிலாக, "மீன் நோக்கும்' என அச்சிடப்பட்டிருந்தது. தமிழ் முதல்தாளில் இருந்த அச்சுப்பிழை காரணமாக, மாணவ, மாணவியர் குழப்பம் அடைந்துள்ளனர்.

இதுகுறித்து தமிழ் பாட ஆசிரியர் ஒருவர் கூறியதாவது:தமிழ் பாடத்தில் ஒரு எழுத்து மாறினாலும், அதன் பொருள் மாறிவிடும். மீள் நோக்கும் என்பதற்கு பதில், மீன் நோக்கும் என, கேள்வி கேட்கப்பட்டுள்ளதால், அதன்அர்த்தமும், பொருளுமே மாறிவிட்டது. பாடல் வரி மீள் நோக்கும் என தொடங்கும் என, மாணவர்களுக்கு தெரிந்திருந்தும், வினாத்தாளில் மீன் என கொடுக்கப்பட்டதால், அதை வைத்து சிலர் முழு பாடலையும், மீன் நோக்கும் என மாற்றி எழுதி வைத்துள்ளனர். முதன்முதலாய் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, இது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த இரு கேள்விகளுக்கும், மாணவர்கள் மாற்றி எழுதியிருந்தாலும், மதிப்பெண் வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார். முதல் தேர்விலேயே, குழப்பம் ஏற்பட்டதால், மாணவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி