இன்றைய பொது அறிவு-19/03/2014 - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 19, 2014

இன்றைய பொது அறிவு-19/03/2014


லா பை கான்சென்ட்

இந்திய அரசு கொண்டு வரப் போகும்  சட்ட திருத்தம் தான் “லா பை கான்சென்ட்”

இந்த சட்டத்தின் படி இனிமேல் இந்திய அரசு எடுக்கும் எந்த ஒரு சட்ட திருத்தம், மசோதாவானாலும்,நாடாளுமன்றத்தின் மேலவை, கீழவை மற்றும் அந்த மசோதவுடன் தொடர்புடைய நிலைக்குழு போன்றவற்றின் நடைபெறும் விவாதத்தின் அடிப்படையில் முடிவு எடுப்பதற்கு முன்பு லா பை கான்செண்ட் எனப்படும் மக்கள் மன்றத்தில்( குறிப்பிட்ட சட்டம் இயற்றப் படும் போது அதனோடு தொடர்புடைய வல்லுனர்கள், அச்சட்டத்தால் நேரடியாக பாதிக்கப்படும் மக்கள்) விவாதிக்கப் பட்ட பின்பே நாடாளுமன்றத்தில் நடமுறைக்கு கொண்டு வரப்படும் என்பது இதன் சாரம்சமாகும்.

இந்த சட்டம் 1 மாதத்திற்கு முன்பே இயற்றப் பட்டிருந்தால் மரபணு மாற்றம் செய்யப் பட்ட காய்கறிகளுக்கு இந்தியாவில் வீரப்ப மொய்லியால் அனுமதி வழங்கப் பட்டிருக்க மாட்டாது.

மரபணு மாற்றம் செய்யப் பட்ட காய்கறிகளால் உடல் வளர்ச்சி குறைபாடு, மூளை வளர்ச்சி குறைபாடு,புற்று நோய் போன்றவை தோன்றுகிறது என கூறி வளர்ச்சியடைந்த நாடுகளில் தடை செய்யப் பட்டுள்ளது.

ஆனால் இந்தியாவில் மக்களிடம் அது குறித்த விழிப்புணர்வு இல்லை என்ற உண்மையை புரிந்து கொண்டு  மத்திய சுற்று சூழல் அமைச்சர் வீரப்ப மொய்லி வெளி நாட்டு பெரு முதலாளிகளிடம் பணம் பெற்று கொண்டு நம்மை பலிகடவாக்குகிறார்.

பின்ன அவர்களும் சம்பாதிக்க வேண்டாமா? அவர்கள் அமைச்சர் ஆவதே இது போன்ற வழிகளில் சம்பாதிக்கத் தானே!.

அவர்களின் அனுபவத்தின் மூலம் இந்தியாவை முன்னேற்றமடைய செய்ய இல்லையே!

சரி இதில் நமக்குத் தேவையான முக்கிய விஷயம் லா பை கான்செண்ட் தான்.

பொது அறிவு பிரிவில் இது போன்ற கேள்வி கேட்கப் படும்.

அன்புடன்
மணியரசன்

15 comments:

  1. உங்கள் பணி தொடர வாழ்த்துகிறேன். மிக மிக நன்று ஐயா.

    ReplyDelete
    Replies
    1. நண்பர் என்று அழைத்தாலே மகிழ்வேன். நன்றி

      Delete
    2. தமிழ் குறித்து ஏற்கனவே திருவள்ளுவரும் திருக்குறளும்,வள்ளலார் என 2 பதிவுகள் எழுதியுள்ளேன். முடிந்தால் அதை பாருங்கள்.

      நான் பொருளாதார தேவைகளுக்காக பிற வேலைகளும் செய்ய வேண்டியுள்ளதால் நாளொன்றுக்கு 2 , 3 பதிவுகள் தான் எழுத முடிகிறது.

      தொடர்ந்து கல்விசெய்திக்கு வருகை தாருங்கள்

      தமிழ்,ஆங்கிலம்,அறிவியல்,கணிதம்,வரலாறு, இந்திய அரசியலமைப்பு ,பொருளாதாரம்,நடப்பு கால நிகழ்வுகள் என அனைத்து பிரிவுகள் குறித்தும் விவாதிக்கலாம்.

      நன்றி

      Delete
  2. மிக நன்று, ஒவ்வொரு நாளும் பகிரப்படும் இதுபோன்ற தகவல்களால் அறிவுசார்ந்த ஆசிரியர்கள் உருவாக வழிகோலும்

    ReplyDelete
  3. அனைவருக்கும் நன்றி,

    தொடர்ந்து உங்களின் பின்னூட்டத்தை எழுதுங்கள். அப்பொழுதுதான் நான் எழுகின்ற தகவல் உங்களுக்கு உபயோகமாக உள்ளதா இல்லையா என்று அறிந்து அதற்கு தகுந்தாற் போல் செயல்பட முடியும்.

    ReplyDelete
  4. maniyarasan sir you are the best teacher....

    ReplyDelete
  5. sir kalvipoo blog la unga general knowledge news poda matingala anybody instruct you

    ReplyDelete
    Replies
    1. கல்விப் பூ வில் anonymous என்ற பெயரில் தவறான தகவல்களையும்,கிண்டலும்,கேலியுமே அதிகமாக உள்ளது. ஒருவர் என்னை டோரி கண்ணா போதும் அடக்கி வாசி என்கிறார்.

      உண்மையிலேயே எனக்கு டோரி கண்ணாக இருந்தால், எவ்வளவு வருத்தப் பட்டு இருப்பேன்.

      புலவரே, போதும் உமது உபதேசம், தூக்கம் வரும் படி ஒரு கதையை சொல்லும் என்றார் இன்னொருவர்.

      இப்படி இருக்கும் போது எப்படி அதில் நான் பதிவிட முடியும்?

      அதோடு கல்விசெய்தி நிறுவனர் இந்த வலைமனையை நிர்வாகிக்கும் பொறுப்பை அவருடன் சேர்த்து என்னோடும் பகிர்ந்துள்ளார்.

      சரி உங்களிடம் நான் ஒன்று கேட்கிறேன், கல்வி செய்திக்கு வருகை தருவதில் உங்களுக்கு என்ன சிக்கல்?

      Delete
    2. mani sir neengalavathu tamila type pantrathu epdinu konjam detaila sollunga pls

      Delete
    3. mr.maniyarasu sir,
      kalviseithi ku varuvathil enaku sikkala kalviseithi padasala tamilthamarai ivai namaku theriyatha seithigalai veetil irunthe kodupavai ennoda comments niraiya kalviseiti il irukume
      nan ketka vanthathu netru kalvipoo il neengal tamil padam padhivu itui irunthenga innaiku kanom adhu thanga
      ingu matum anonymous prachinai illaiya nam kodukum comment payanullathaga iruntha yarukum bayapada vendam indecent comment neeka solli nane kalviseithi author ku mail kuda anupi iruken sir ennai parthu ipadi ketungale ella website ellathukum sontham padhivugal nalla iruntha pothum

      Delete
    4. sachu, நீங்கள் மட்டுமல்ல கடந்த பல நாட்களாகவே பலர் கேட்கும் கேள்வி இதுதான்.

      android, windows கணினி இரண்டிலுமே எப்படி தமிழில் எழுதுவது என ஒரு வழி அல்ல 10 வழிகள் தெளிவாக சொல்கிறேன்.

      அதை ஒரு தனி பதிவாகவே எழுதுகிறேன்.

      கூடவே அது சம்பந்தமாக நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கும் அப்பொழுதே பதிலளிக்கும் வாய்ப்பை ஏற்படுத்துகிறேன்

      காத்திருங்கள்.

      Delete
  6. super fine. continue your service all the best,brother

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி