வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு 26, 27 தேதிகளில் பயிற்சி. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 20, 2014

வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு 26, 27 தேதிகளில் பயிற்சி.


மக்களவைத் தேர்தலை முன்னிட்டு புதுவை மாவட்டத்தில் 3,224 அரசு ஊழியர்களுக்கு தேர்தல் பணி ஆணைகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன.

பயிற்சிக்கு வராதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதுதொடர்பாக மாவட்டத்தேர்தல் அலுவலர் தீபக்குமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு:புதுவை மாவட்டத்தில் உள்ள 23 பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கிய 654 வாக்குச்சாவடிகளுக்கான வாக்குச்சாவடி அதிகாரிகளாக மாநில மற்றும் மத்திய அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு சார்பு நிறுவனங்களில் பணிபுரியும் சுமார் 3,224 அரசு அலுவலர்கள் தேர்வு செய்யப்பட்டு நியமிக்கப்பட்டுள்ளனர்.அவ்வாறு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கு தேர்தல் பணி ஆணை மற்றும் பயிற்சி வகுப்புக்கான அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.

மேலும் தேர்தல் பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்ய உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடமிருந்து தேர்தல் பணிச்சான்று (படிவம் 12-B) பெற்றுக் கொண்டு வாக்குப்பதிவின் போது பணியில் இருக்கும் வாக்குச்சாவடியிலேயே வாக்களிக்க வகை செய்யப்பட்டுள்ளது.3 கட்ட பயிற்சிவாக்குச்சாவடி அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்புகள் 3 கட்டங்களாக நடக்க உள்ளன. அதிகாரிகளுக்கான முதல் பயிற்சி வகுப்பு வரும் 22, 23 ஆகிய தேதிகளிலும், மற்றும் பிற வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு 26, 27 தேதிகளிலும் அந்தந்த உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகள் கண்காணிப்பில் நடைபெறவுள்ளது.பயிற்சிக்கு வராத பணியாளர்கள் மீது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951-ன் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி