பட்டப் படிப்பு, முதுகலை படிப்பு முடித்த பின், பிளஸ் 2 முடித்த பெண்ணுக்கு, ஆசிரியை பணி வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 20, 2014

பட்டப் படிப்பு, முதுகலை படிப்பு முடித்த பின், பிளஸ் 2 முடித்த பெண்ணுக்கு, ஆசிரியை பணி வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.


பட்டப் படிப்பு, முதுகலை படிப்பு முடித்த பின், பிளஸ் 2 முடித்த பெண்ணுக்கு, ஆசிரியை பணி வழங்க, பரிசீலிக்க வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முதுகலை ஆசிரியர் பணிக்கு, கனிமொழி என்பவர், விண்ணப்பித்தார். கடந்த ஆண்டு, ஜூலையில், எழுத்து தேர்வு நடந்தது. சான்றிதழ் சரிபார்ப்புக்குப் பின், கனிமொழியின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. 'முறையான வரிசைப்படி, கல்வி பயிலவில்லை' என, காரணம் கூறப்பட்டது.பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற பின், பிளஸ் 2 படிப்பில், கனிமொழி, தோல்வியுற்றார். அதன் பின், சென்னை பல்கலைகழகத்தின், திறந்தவெளி பல்கலையில், பி.ஏ., தமிழ் பட்டம் பெற்று, ரெகுலர் படிப்பில், பி.எட்., பட்டமும் பெற்றார். பின், அண்ணாமலை பல்கலையில், ரெகுலர் படிப்பில், எம்.ஏ., பட்டம் பெற்றார்.இதன் பின், பிளஸ் 2 தேர்வை, தனியாக எழுதி, தேர்ச்சி பெற்றார். 'பட்டப் படிப்புமுடிப்பதற்கு முன், பிளஸ் 2 முடிக்காததால், ஆசிரியர் பணிக்கு பரிசீலிக்கவில்லை' என, ஆசிரியர் தேர்வு வாரியம் தரப்பில் கூறப்பட்டது.வாரியத்தின் முடிவை எதிர்த்தும், முதுகலை ஆசிரியர் பணிக்கு தேர்ந்தெடுத்து, நியமிக்க வேண்டும் எனக் கோரி, உயர் நீதிமன்றத்தில், கனிமொழி, மனுத் தாக்கல் செய்தார்.

மனுவை, நீதிபதி, நாகமுத்து விசாரித்தார்.கனிமொழி சார்பில், வழக்கறிஞர், தாட்சாயணி ரெட்டி ஆஜரானார்.நீதிபதி, நாகமுத்து பிறப்பித்த உத்தரவு:ஏற்கனவே, ஜோசப் இருதயராஜ் என்பவர் தொடுத்த வழக்கில், 'பட்டப் படிப்பு முடித்த பின், பிளஸ் 2 படித்ததை, பரிசீலிக்கலாம்' என, இரண்டு நீதிபதிகள் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' உத்தரவிட்டுள்ளது. எனவே, கனிமொழியின் விண்ணப்பத்தை நிராகரித்ததை ஏற்க முடியாது.ஆசிரியர் தேர்வு வாரியத்தின் உத்தரவு, ரத்து செய்யப்படுகிறது. சான்றிதழ் சரிபார்ப்புக்குப் பின், மனுதாரர் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில், முதுகலை ஆசிரியர் பணியில் நியமிக்க, ஆசிரியர் தேர்வு வாரியம், பரிசீலிக்க வேண்டும். நான்கு வாரங்களுக்குள், இறுதி உத்தரவைபிறப்பிக்க வேண்டும்.இவ்வாறு, நீதிபதி நாகமுத்து உத்தரவிட்டு உள்ளார்.

10 comments:

  1. Fine. Im Vadivel completed B.Sc (Maths) regular (2005-2008). I've 1 question. I completed B.Ed (Maths) through regular and M.Sc (Maths ) through corresponds different Universities at same academic year but passed different time tables. i.e., B.Ed (2010-2011) passed May 2011. M.Sc (2009-2011) passed December 2012. My question is if i am appointed as B.T Maths , am I eligible for M.Sc degree Incentive & PG Asst promotion? Pls Advice . Thank you .

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. apdina regular la familyalam thiyagam pannitu kashtappattu padichavangalukku enna mariyathai

    ReplyDelete
  4. +2 mutikkamal eppadi B A EPPADI admission pannalam pls clarify.

    ReplyDelete
    Replies
    1. open universty la padikka muraiyana kalvi thakuthi thevai ellai

      Delete
    2. apadina adhu eligible la ple reply/

      Delete
  5. பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற பின், பிளஸ் 2 படிப்பில், தோல்வியுற்று .அண்ணாமலை திறந்தவெளி பல்கலையில் (2001), பட்டப் படிப்பு, முதுகலை படிப்பு முடித்த பின், பிளஸ் 2 (2012) தேர்வை, தனியாக எழுதி, தேர்ச்சி பெற்று இருக்கிறோம். இதே போலே அதிம் நபர் உள்ளனர். மனம் அழுத்தத்தில் இருக்கிறோம். நல்ல தீர்ப்பு நான்கு வாரங்களுக்குள், இறுதி உத்தரவைபிறப்பிக்க வேண்டும். Tnpsc Group 2 எழுத முடியுமா? Ple Reply........

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி