குரூப்-4 தேர்வில் தேர்வானவர்களுக்கு கலந்தாய்வு 24-ல் தொடக்கம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 20, 2014

குரூப்-4 தேர்வில் தேர்வானவர்களுக்கு கலந்தாய்வு 24-ல் தொடக்கம்.


குரூப்-4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் முதல்கட்டமாக 6 ஆயிரம் பேருக்கு கலந்தாய்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு பணி வரும் 24-ம்தேதி (திங்கள்கிழமை) தொடங்குகிறது. தேர்வில் குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் எடுத்த சுமார்

12 லட்சம் பேரின் மதிப்பெண் விவரங் கள் அடங்கிய ரேங்க் பட்டியல், டி.என்.பி.எஸ்.சி. இணையதளத் தில் வெளியானது.காலியிடங்க ளின் எண்ணிக்கை 5,853 ஆக அதிகரிக்கப்பட்டது.

கலந்தாய்வு அட்டவணை:

தேர்வில் வெற்றி பெற்று கலந் தாய்வுக்கு அழைக்கப்படுவோரின் விவரம் ஏதும் வெளியிடப்பட வில்லை. வழக்கமாக தேர்வு முடிவை வெளியிடும்போது, தேர்ச்சி பெற்றவர்களின் பதிவு எண்களை டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டுவிடும். இந்தமுறை அவ்வாறு தேர்ச்சி பெற்றவர்கள் பட்டியல் வெளியிடப்படாததால், தேர்வர்கள் குழப்பம் அடைந்தனர். இந்நிலையில் இளநிலை உதவியாளர், வரைவாளர், நில அளவர் ஆகிய பதவிகளுக்கான கலந்தாய்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்புக்கான பட்டியலை டி.என்.பி.எஸ்.சி. புதன்கிழமை வெளியிட்டது.

6,000 பேருக்கு அழைப்பு:

அதன்படி, பொது தரவரிசையில் முதல் 6 ஆயிரம் இடங்களுக்குள் இடம்பெற்றிருப்பவர்கள் கலந்தாய்வுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

கலந்தாய்வு, வரும் 24-ம் தேதி தொடங்குகிறது. 28-ம் தேதி வரை சிறப்புப் பிரிவினருக்கும் ஏப்ரல் 1 முதல் பொது தரவரிசையில் இடம் பெற்றிருப்பவர்களுக்கும் கலந்தாய்வு நடத்தப்படும். முதல் நாளில் கலந்தாய்வு, மறுநாள் சான்றிதழ் சரிபார்ப்பு என்ற வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கலந்தாய்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு பணிமே 8-ம் தேதி முடிவடையும் என்று டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் மா.விஜயகுமார் அறிவித்துள்ளார்.

2 comments:

  1. Typist 6283 overall rank community rank 1316 mbc women 7/85 any chance plz rply

    ReplyDelete
  2. Tnpsc group3 junior inspector of co-operatives conducted August 3. 2013 anybody attended pls reply.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி