பொறியியல் படிப்பு: 570 கல்லூரிகள்; 1.75 லட்சம் இடங்கள். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 22, 2014

பொறியியல் படிப்பு: 570 கல்லூரிகள்; 1.75 லட்சம் இடங்கள்.


பொறியியல் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வு ஜூன் மூன்றாவது வாரத்தில் தொடங்கப்பட உள்ளது.தமிழகம் முழுவதும் மொத்தம் 570 கல்லூரிகளில் உள்ள
1.75 லட்சம் பி.இ., பி.டெக். இடங்களுக்கு இந்த கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது.பொறியியல் கலந்தாய்வை சென்னை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது. வரும் 2014-15 கல்வியாண்டுக்கான கலந்தாய்வு ஜூன் மூன்றாவது வாரத்தில் தொடங்க உள்ளது.இதுகுறித்து தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலர் வி. றைமண்ட் உத்தரியராஜ் கூறியது:பொறியியல் கலந்தாய்வு ஜூன் மூன்றாவது வாரத்தில் தொடங்கி, ஜூலை 31-ம் தேதிக்குள் முடிக்கப்பட்டுவிடும்.இதற்கான விண்ணப்பங்கள் விநியோகம் மே முதல் வாரத்தில் தொடங்கப்படும். பெரும்பாலும் மே 3-ம் தேதி முதல் விண்ணப்ப விநியோகம் தொடங்கும்.சென்னை அண்ணா பல்கலைக்கழகம் உள்பட தமிழகம் முழுவதும் 58 மையங்களில் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும்.இதற்காக 2.5 லட்சம் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

570 கல்லூரிகள்:

கடந்த ஆண்டு கலந்தாய்வில் 574 கல்லூரிகள் இடம்பெற்றிருந்தன. ஆனால், இவற்றில் 4 கல்லூரிகள் மாணவர் சேர்க்கையை மேற்கொள்ளவில்லை. எனவே, இம்முறை 570 கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டிலான இடங்களுக்கு மட்டுமே ஒற்றைச் சாளர கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்பட உள்ளது.

1.75 லட்சம் பி.இ. இடங்கள்:

அண்ணா பல்கலைக்கழக துறைகளில் (80 பி.ஆர்க். இடங்கள் உள்பட) 2,285 இடங்கள், பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளில் 5,340 இடங்கள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகளில் (80 பி.ஆர்க். இடங்கள் உள்பட) 6390 இடங்கள், சிக்கிரி மற்றும் சிப்பெட் கல்வி நிறுவனங்களில் 160 இடங்கள் மற்றும் தனியார் சுயநிதி கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டிலான இடங்கள் 1,60,825 என மொத்தம் 1.75 லட்சம் பொறியியல் இடங்களுக்கு கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது என்றார் அவர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி