பள்ளிக்கு வராமல், வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்ட 7 ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 23, 2014

பள்ளிக்கு வராமல், வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்ட 7 ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை


பள்ளிக்கு வராமல், வருகை பதிவேட்டில் கையெழுத்திட்ட ஏழு ஆசிரியர்கள் மீது, மாவட்ட கல்வி அதிகாரி ஒழுங்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம், மேலந்தல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், ஒன்பது ஆசிரியர்கள் பணியில் உள்ளனர். இதில், ஒருவர் மகப்பேறு விடுப்பிலும், மற்றொருவர், தேர்தல் பணிக்கு சென்றார். மீதமுள்ள, ஏழு ஆசிரியர்கள், இம்மாதம், 6ம் தேதி முதல், மூன்று நாட்கள் பள்ளிக்கு வரவில்லை. இதனால் பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது. இது குறித்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலருக்கு, கிராம மக்கள் தகவல் தெரிவித்தனர்.

கடந்த, 10ம் தேதி, பணிக்குத் திரும்பிய ஏழு ஆசிரியர்கள், மூன்று நாட்களும் வேலை செய்ததாக வருகை பதிவேட்டில் கையெழுத்து போட்டுள்ளனர். அன்று, மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் மேற்கொண்ட அதிரடி ஆய்வில், மூன்று நாட்கள் பள்ளி மூடப்பட்டிருந்த நிலையில், ஏழு ஆசிரியர்களும் வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்ட சம்பவம் அம்பலமானது. மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் சண்முகம், ஏழு ஆசிரியர்களிடமும் விளக்கம் கேட்டு, ஒழுங்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி