அறிவியல் உபகரணங்கள் வாங்க தலைமை ஆசிரியர்கள் மறுப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 22, 2014

அறிவியல் உபகரணங்கள் வாங்க தலைமை ஆசிரியர்கள் மறுப்பு.


அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தின் கீழ், கடந்த 2011ம் ஆண்டு முதல் 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களின் அறிவியல் திறனை மேம்படுத்த, அறிவியல் உபகரணங்கள் வாங்க, ரூ.25 ஆயிரம் வழங்கப்படுகிறது.
கடந்த ஆண்டு, வெளிமாவட்டங்களை சேர்ந்த தனியார் கம்பெனி மூலம், கருவிகள் வழங்கப்பட்டன. இதற்குதலைமை ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், தலைமை ஆசிரியர்களே உபகரணங்களை வாங்க, ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த கல்வியாண்டில், தனியார் கம்பெனிமூலம், அறிவியல் கருவிகள், அரசு உயர்நிலை பள்ளிகளில் இறக்கி வைக்கப்பட்டு, தலைமை ஆசிரியர்களிடம் கையெழுத்து பெறும் பணி துவங்கியுள்ளது. இதற்கு தலைமை ஆசிரியர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

அரசு பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவர் கூறுகையில்,"" தனியார் மூலம் வழங்கும், அறிவியல் உபகரணங்கள் தரமற்று, விலை அதிகமாக உள்ளது. மேலும், பள்ளிகளின் தேவை அறிந்து, இவர்கள் வழங்குவதில்லை. கடந்த ஆண்டு, வாங்கிய உபகரணங்களையே மீண்டும் வழங்குகின்றனர். எனவே, பழைய முறையிலேயே, அறிவியல் உபகரணங்களை வாங்க, வழிவகை செய்ய வேண்டும். அல்லது இதற்கு தெளிவான அறிவிப்பு வெளியிட வேண்டும், என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி