தமிழ், ஆங்கிலத்தில் 'நோட்டா': ஐகோர்ட்டில் தேர்தல் கமிஷன் பதில். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 26, 2014

தமிழ், ஆங்கிலத்தில் 'நோட்டா': ஐகோர்ட்டில் தேர்தல் கமிஷன் பதில்.


ஓட்டு சீட்டில், 'நோட்டா' (யாருக்கும் ஓட்டு இல்லை) என, தமிழ், ஆங்கிலத்தில் அச்சிடப்பட்டிருக்கும்' என, சென்னை உயர்நீதிமன்றத்தில், தேர்தல் கமிஷன் பதிலளித்துள்ளது.
இதையடுத்து, இவ்வழக்கு, முடிவுக்கு வந்தது.சென்னையைச் சேர்ந்த, வழக்கறிஞர், சத்தியசந்திரன், தாக்கல் செய்த மனுவில், 'ஓட்டுப் பதிவு இயந்திரத்தில், வேட்பாளர்களுக்கு என, சின்னங்கள் இருக்கும். எந்த வேட்பாளருக்கும், ஓட்டுப் போட விரும்பாதவர்கள், தங்கள் விருப்பத்தை பதிவு செய்ய ஏதுவாக, நோட்டா என்ற பட்டன் அமைக்கப்படுகிறது. அதற்கு, சின்னம் ஒதுக்க, தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது. இம்மனு, தலைமை நீதிபதி (பொறுப்பு) அக்னி ஹோத்ரி, நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது. தேர்தல் கமிஷன் சார்பில், மூத்த வழக்கறிஞர்,ஜி.ராஜகோபால், ''நோட்டா பற்றி, தேர்தல் கமிஷன் கவனத்தில் கொண்டுள்ளது. ஓட்டுச் சீட்டில், ஆங்கிலம், தமிழில், நோட்டா அச்சிடப்பட்டிருக்கும்,'' என்றார். தேர்தல் கமிஷன் தரப்பில் வெளியிடப்பட்ட, பத்திரிகை குறிப்பையும், கோர்ட்டில் தாக்கல் செய்தார். மனுதாரர் தரப்பில், நோட்டா சின்னம் பற்றி பரிந்துரை செய்ததை,தேர்தல் கமிஷன் பரிசீலிக்கும் எனவும், தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, இவ்வழக்கை, முதல் பெஞ்ச் பைசல் செய்தது. தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கறுப்பு நிற பின்னணியில், செவ்வக வடிவத்துக்குள், நோட்டா என, ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருக்கும். ஓட்டுச் சீட்டில், தமிழில், 'மேற்காணும் நபர்களில் எவருமில்லை' எனவும் அச்சிடப்பட்டிருக்கும்' என, கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி