வி.ஏ.ஓ., தேர்வு வினா முறையில் மாற்றம்; பகுதிகள் கடினமாக இருக்கும் என அச்சம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 23, 2014

வி.ஏ.ஓ., தேர்வு வினா முறையில் மாற்றம்; பகுதிகள் கடினமாக இருக்கும் என அச்சம்.


டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ள வி.ஏ.ஓ., தேர்வு, புதிய வினாக்கள் முறையால்,கடினமாக இருக்கும் என தேர்வு எழுதுபவர்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாடுஅரசு பணியாளர் தேர்வாணையம் 2,342 வி.ஏ.ஓ., பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்த தேர்விற்கு விண்ணப்பிக்க கடைசி நாள் ஏப்ரல் 15. ஜூன் 14 ல் எழுத்துதேர்வு நடக்க உள்ளது.கடந்த காலங்களில் வி.ஏ.ஓ., தேர்வில், 100 வினாக்கள் தமிழ் அல்லது ஆங்கில பாடத்திலும், 100 வினாக்கள் பொதுஅறிவு தொடர்பாக கேட்கப்படும். ஆனால், தற்போது, அறிவிக்கப்பட்டுள்ள வி.ஏ.ஓ., தேர்வு வினாக்களில், மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. பொதுத்தமிழ் அல்லது ஆங்கில பாடத்தில் 80 வினாக்களும், திறனறி பாடத்தில் 20 வினாக்களும், பொதுஅறிவு பாடத்தில் 75 வினாக்களும், கிராமநிர்வாக அலுவலர் தொடர்பாக 25 வினாக்கள், என, மொத்தம் 200 மதிப்பெண்களுக்கு கேட்கப்படவுள்ளது.பத்தாம்வகுப்பு படித்துவிட்டு, வி.ஏ.ஓ., தேர்வு எழுதுபவர்கள், பழைய பாடத்திட்டத்தை விட, இந்த புதிய தேர்வு முறை, கடினமாக இருக்கும், என அச்சப்படுகின்றனர். இதுகுறித்து ஆயக்குடி இலவச பயிற்சிமைய இயக்குனர் ராமமூர்த்தி கூறியதாவது: டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ள புதிய கேள்விமுறை மாற்றம் வரவேற்கதக்கது. வி.ஏ.ஓ., பணி தொடர்பான வினாக்களுக்கு பதிலளிக்க, மாணவர்கள் தங்களை தயார் செய்துகொள்ள வேண்டும். புதிய பாடத்திட்டத்தின்படி, இப்போது இருந்தே படித்தால், தேர்வில் எளிதில் வெற்றிபெறலாம், என்றார்.

3 comments:

  1. உயர்திரு இராமமூர்த்தி அய்யா அவர்களின் இந்த இலவச பயிற்சிக்கு எங்களது நன்றி .தங்கள் இப்பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. லஞ்சம் வாங்கமாட்டோம் என்ற உறுதிமொழி மட்டுமே கட்டணத்தொகையாக பெற்றுக்கொண்டு இலவசப்பயிற்சி அளித்து வரும் அவரது சேவையைப் பாராட்டுவதற்கு வார்த்தைகளே இல்லை நண்பா.

      Delete
  2. Watch TNPSC website . Group 4 JA vacant details published yesterday night.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி