ஆசிரியர்களுக்கு தொலைதூரதேர்தல் பணியை தவிர்க்கக் கோரிக்கை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 23, 2014

ஆசிரியர்களுக்கு தொலைதூரதேர்தல் பணியை தவிர்க்கக் கோரிக்கை.


ஆசிரியர்களுக்குத் தொலைதூர தேர்தல் பணி அளிப்பதைத் தவிர்க்க வேண்டும் என தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து நாகை மாவட்ட டிட்டோஜேக் ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாவட்டச் செயலருமான பா. ரவி நாகை மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவின் விவரம்:ஆசிரியர்கள் பணியாற்றும் சட்டப்பேரவைத் தொகுதிக்கு அருகிலுள்ள தொகுதிகளில் தேர்தல் பணிவாய்ப்பு வழங்க வேண்டும். மாறாக, தொலைதூரத்தில் தேர்தல் பணி அளிப்பதால், ஆசிரியைகள் பெரும் அவதிக்குள்ளாக நேரிடுகிறது.ஆசிரியர்களுக்கு எந்த வாக்குச் சாவடி மையத்தில் பணி வழங்கப்படுகிறது என்ற விவரத்தை 2 நாள்களுக்கு முன்பு தெரிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம், தன்னுடைய பணியிடத்துக்குச் செல்வதற்கான முன்கூட்டிய திட்டமிடலை ஆசியர்கள் மேற்கொள்ள முடியும்.

ஆசிரியர்களுக்கு, அவர்களின் ஊதியவீதத்தின் அடிப்படையில் தேர்ல் பணி வழங்க வேண்டும். கர்ப்பிணிகள், உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள், மாற்றுத் திறனாளிகள், பணி நீட்டிப்பில் உள்ளவர்கள் ஆகியோருக்கு தேர்தல் பணியைத் தவிர்க்க வேண்டும் எனஅந்தக் கோரிக்கை மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி