மாற்றுத் திறனாளிகள் தங்களது இலவச பஸ் பயணஅட்டையை புதுப்பித்துக் கொள்ளலாம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 25, 2014

மாற்றுத் திறனாளிகள் தங்களது இலவச பஸ் பயணஅட்டையை புதுப்பித்துக் கொள்ளலாம்.


தமிழகம் முழுவதும் உள்ள மாற்றுத் திறனாளிகள் வரும் நிதியாண்டிலும்(2014-15) தொடர்ந்து பலன் அடைய தங்களது இலவச பஸ் பயணஅட்டையை புதுப்பித்துக் கொள்ளலாம்.இது தொடர்பாக
திருவள்ளூர் மாவட்ட மறுவாழ்வு நல அலுவலர்டி.சீனிவாசன் கூறியதாவது:

மாற்றுத் திறனாளிகள் இப்போது பயன்படுத்தி வரும் இலவச பஸ் பயணஅட்டை வரும் 31-ஆம் தேதி காலாவதியாகிறது. தேர்தல்நடத்தை நெறிமுறைகள் அமலில் உள்ளதால், மாற்றுத் திறனாளிகளுக்கு இலவசபஸ் பயண அட்டையை வரும் நிதியாண்டுக்கு (ஏப்ரல் 1 முதல்)புதுப்பிப்பது தொடர்பாகமாற்றுத் திறனாளி நல ஆணையருக்கு அனுமதிக்கடிதம் அனுப்பினேன். திருவள்ளூர் உள்பட தமிழகம் முழுவதும் உள்ள மாற்றுத் திறனாளிகள் தங்களது இலவச பஸ் பயண அட்டையை புதுப்பித்துக் கொள்ளலாம் என்று அவர்கூறினார்.இதையடுத்து திருவள்ளூர் மாவட்டத்தில் இதுவரை 100 மாற்றுத்திறனாளிகள்தங்களது இலவச பஸ் பயண அட்டையைப் புதுப்பிக்க பரிந்துரைக் கடிதம் பெற்றுள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி