அறிவியல் செய்தி-மிதக்கும் அணு மின்சார நிலையம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 28, 2014

அறிவியல் செய்தி-மிதக்கும் அணு மின்சார நிலையம்

 அணு மின் நிலையம் (nuclear power plant, NPP) ஒன்று அல்லது பல அணுக்கரு உலையிலிருந்து வெப்ப ஆற்றலைப் பயன்படுத்தும் ஓர் அனல் மின் நிலையம் ஆகும்

.இதுவும் வழக்கமான  அனல் மின் நிலையம் போன்றே வெப்பம் மூலம் நீராவி உருவாக்கப்பட்டு நீராவிச் சுழலியுடன்(turbon) இணைக்கப்பட்டுள்ள மின்னாக்கி  மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

 ஓரிடத்தில் புதிதாக அணு மின்சார நிலையம் அமைக்க வேண்டுமானால் அதில் ஆயிரத்தெட்டு பிரச்சினைகள் உண்டு. தேவையான நிலத்தை கையகப்படுத்தியாக வேண்டும். அதற்கு மாநில அரசின் தயவு தேவை.  சுற்றுச்சூழல் வாரியங்களின் ஒப்புதல் பெறப்பட்டாக வேண்டும். அந்த வட்டார மக்களிடையே விளக்கக் கூட்டங்களை நடத்த வேண்டும்.

  விலாசம் தெரியாத கட்சிகள் அறிக்கைகளை வெளியிடும். அணுமின்சார நிலையத்தில் இடம் பெறும் அணு உலைக்கும் அணுகுண்டுக்கும் வித்தியாசம் தெரியாதவர்கள்   அணுமின் நிலையத்தை “என்றாவது வெடிக்கப் போகும் அணுகுண்டு” என்று வருணித்து பீதி கிளப்புவார்கள்.

ரஷியா இப்போது மேற்கொண்டுள்ள மிதக்கும் அணுமின் நிலையத் திட்டத்தில் இந்தப் பிரச்சினைகளுக்கு இடமே இல்லை.  ரஷியா இப்போது மிதக்கும் அணுமின் நிலையங்களை உருவாக்குவதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. இந்த அணுமின் நிலையங்கள் ரஷியாவுக்கு வடக்கே பனிக்கட்டியால் மூடப்பட்ட கடலில் கரையோரமாக  நிறுத்தப்பட்டு மின் உற்பத்தியில் ஈடுபடும்.இந்த மின்சாரம் கரையோரமாக உள்ள இடங்களுக்கு அளிக்கப்படும்.

                        
                    மிதக்கும் அணுமின் நிலையம்

கப்பல்களில் அணு உலை இடம் பெறுவது என்பது புதிது அல்ல. பனிக்கட்டியால் மூடப்பட்ட கடல் பகுதிகளில் பனிக்கட்டியை உடைத்து கப்பல்கள் செல்வதற்கு வழி அமைக்க ரஷியா ஏற்கெனவே விசேஷக் கப்பல்களைப் பயன்படுத்தி வருகிறது. இவை பனிக்கட்டி உடைப்பான் கப்பல்கள் ( icebreakers) என்று குறிப்பிடப்படுகின்றன. இவற்றில் பெரும்பாலானவை அணுசக்தியால் இயங்குவை. அதாவது இவற்றில் அணு உலைகள் உண்டு.  இக் கப்பல்கள் இயங்க இந்த அணு உலைகள் உதவுகின்றன

இதே பாணியில் தான் ரஷியா மிதக்கும் அணுமின் நிலையங்கள் உருவாக்கி வருகிற்து.. 2015 ஆம் ஆண்டுக்குள் குறைந்தது ஏழு மிதக்கும் அணுமின் நிலையங்களைக் கட்டி முடிக்க ரஷியா திட்டமிட்டுள்ளது.

இந்த அணுமின் நிலையம் பெரிய மிதவை மீது அமைந்திருக்கும். ஆகவே இதைத் தேவையான இடத்துக்கு இழுத்துச் செல்ல வேண்டியிருக்கும். இதில் தலா 70 மெகாவாட் மின்சாரத்தைத் உற்பத்தி செய்கின்ற இரு அணு உலைகள் இருக்கும். தேவையானால் மின் உற்பத்திக்குப் பதில் கடல் நீரைக் குடி நீராக மாற்றுவதற்கும் இந்த அணு உலைகளைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

மிதக்கும் அணுமின் நிலையங்கள் விஷயத்தில் இரு முக்கிய சாதகங்கள் உள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது. உலகில் பெரும்பாலான அணுமின் நிலையங்கள் கடலோரமாக அமைந்துள்ளன. அந்த அளவில் அவற்றுக்கு ஏட்டளவில் சுனாமி ஆபத்து உள்ளது. சுனாமி அலைகள் கரையோரப் பகுதிகளைத் தான் தாக்கும். கடலில் உள்ள கப்பல்களுக்கு சுனாமியால் ஆபத்து கிடையாது.

ஆகவே மிதக்கும் அணுமின் நிலையங்களுக்கும் சுனாமி ஆபத்து இராது என்று கூறப்படுகிறது.  பூகம்பத்தால் தாக்கப்படுகிற ஆபத்து மிதக்கும் அணுமின் நிலையங்களுக்கு மிகவும் குறைவு என்றும் கூறப்படுகிறது.

ரஷிய நிறுவனம் தயாரிக்கும் இந்த மிதக்கும் அணுமின் நிலையங்களை வாங்கிக் கொள்வதில் சீனா, இந்தோனேசியா, மலேசியா, அர்ஜெண்டினா உட்பட 15 நாடுகள் ஆர்வம் காட்டியுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

19 comments:

  1. பயனுள்ள தகவல் நன்றி....

    ReplyDelete
    Replies
    1. இங்கயே தான் இருக்கிறேன்...நீங்கள் தான் காணவில்லை...
      முன்புபோல அதிகநேரம் இங்கு செலவிட முடியவில்லை பள்ளி இறுதிநாட்கள் அதனால் அந்தவேலைகளையும் பார்க்கவேண்டுமல்லவா....

      Delete
  2. Sir oru doubt, kalvi seithigal la thurai sarndha thagaval nu d.t.ed., b.ed. Pg b.ed nu information irukae, adhu yenna announcement, pls konjam clear pannunga, puriyala

    ReplyDelete
  3. இதில் ஒரு சில காரணங்களுக்காக பலநாடுகள் இந்த திட்டத்தில் ஆர்வம் காட்டவில்லை...ஏன் ரஷ்யாஉம்2013 ஜூன்மதத்தில் இந்த திட்டத்தை மிக சரியான முறையில் அமைக்க திட்டமிட்டு பணிகளை துவங்குமுன்னே ஏனோ இதை ஒத்திவைத்துள்ளது...இந்த செய்தியை ஏற்கனவே விடுதலை பத்திரிக்கையில் 2013 ல் சென்ற ஆண்டு கூடங்குளம் போராட்ட செய்தியின்போது படித்திருப்போம் .....

    இதில் சில பிரச்சினைகள் உள்ளது...

    இந்த மிதக்கும் அணு உலைகளை மிக எளிதாக தீவிரவாதிகள் தாக்கி மக்களுக்கும் இயற்கைக்கும் சேதம் ஏற்படுத்தலாம் என்ற அச்சம்....

    இதன் கழிவுகளை அகற்ற அதிக செலவு மற்றும் சிரமம் ஏற்படும் அவற்றை முறையாக பாதுகாப்பாக அப்புறபடுத்தவேண்டும் என்ற நிலை வேறு...

    அதுமட்டுமில்லாமல் ரஷ்ய அணுஉலைகளின் மீதான நம்பகத்தன்மை இப்போது கேள்வி குறியான நிலையிலே உள்ளது....

    அணுஉலைகளுக்கும் அணுகுண்டிற்கும் வேற்றுமை உள்ளது...ஆனால் இவற்றின் பதிப்பிலும் வேற்றுமை உள்ளது..அணுகுண்டினால் ஏற்படும் இழப்பு மனிதனால் திட்டமிட்டு செய்யப்படும் அழிவுசெயல்...

    ஆனால் அணுஉலைகளினால் ஏற்படுவது விபத்து இதை கணிக்கவும் முடியாது...பாதுகாபிற்க்கான செயல்முறைகளினால் முழுமையான பாதுகாப்பை தரமுடியும் என்ற உத்திரவாதமும் இதுவரை எந்தநாடும் அறிவியலாளர்களும்கொடுததில்லை ..சாத்தியம் என்று சொல்லமுடியாது....

    அணுஉலைகளை கடல்பகுதியில் அமைப்பதே சாத்தியம் ஆனால் கடல் உயிரிகளின் பாதுகப்பிற்க்காக அதன் கழிவுகளை வெளியேற்ற சிலகட்டுபடுகள் உள்ளது...

    இன்றயநிலையில் அணு உலைகளையே நம்பியிருந்த அதிக அணுஉலைகளை பயன்படுத்திய “”””ஜெர்மனி””” இன்றைய நிலையில் அணைத்து அணுஉலைகளையும் மூடிவிட்டு சூரிய சக்திமின்சார உற்பத்தியில் தனது கவனத்தையும் செலுத்தி அதில் கொஞ்சம் வெற்றிபாதையிலும் சென்றுகொண்டிருக்கிறது....இது தான் இன்றயநிலையில் அணைத்து நாடுகளும் யோசிக்க நிலையை ஏற்படுத்தியுள்ளது....ஏனென்றால் உலகில் 22% அளவிற்கு மேல் அணுஉலையை நம்பிஇருந்தநாடு இப்போது அதை கைவிட்டுள்ளது...இது உண்மையில் யோசிக்கவேண்டிய ஒன்று...

    http://en.wikipedia.org/wiki/Nuclear_power_in_Germany

    இந்த விக்கிபீடிய பகுதியில் ஜெர்மனியின் இன்றைய நிலைபற்றி முழுமையான தகவல் கொடுக்கப்பட்டுள்ளது...

    ReplyDelete
    Replies
    1. ஜப்பானின் புகுஷிமா அணு உலை விபத்தின் பிறகு, உலக நாடுகள் பலவும் அணுவை பிளப்பதின் மூலம் உருவாகும் வெப்பத்தைக் கொண்டு மின்சாரம் தயாரிக்கும் முறை குறித்து சற்று யோசிக்கத் தான் செய்தது.

      தொழில் நுட்ப வளர்ச்சியின் உச்சத்தில் இருக்கும் ஜப்பானுக்கே இந்த நிலமை ஏற்பட்டால் நாமெல்லாம் அந்த மூலைக்கு ஈடாகுவோம் என்ற நினைப்புதான்.

      ஆனால் கடற்கரைக்கு அருகில் அமைக்கும் அணு உலைகளை விட இது போன்ற மிதக்கும் அணு உலைகள் பாதுகாப்பானவையே.

      அணு உலையிலிருந்து வெளியேற்றப் படும் அனைத்து கழிவுகளும் கடலிலேதான் கொட்டப் படுகின்றன.அதனால் இது போன்ற மிதக்கும் அணு உலையிலிருந்து கழிவுகளை வெளியற்றப் பாடுவதில் எந்த சிக்கலும் இருக்காது.

      பொதுவாகவே அனைத்து அணு உலைகளிலுருந்தும் வெளியேற்றப் படும் அணுக் கழிவுகளை கடலில் கொட்டுவதன் மூலம் கடல் வாழ் உயிரினங்கள்,சுற்று சூழல் பாதிக்கப் படுகின்றது என்பது உண்மைதான்.

      ஆனால் மனிதனின் தற்போதைய மின்சாரத் தேவைக்கு அணு உலையே பூர்த்தி செய்யக் கூடிய நிலையில் உள்ளது.

      சூரிய மின்ரசாரம்,காற்று மின்சாரம்,புனல் மின்சாரம் போன்றவை ஆண்டு முழுவதும் நமக்கு கிடைப்பவை அல்ல.

      அனல்மின்சாரத்திற்கு பயன்படும் நிலக்கரியாலும் மிகப் பெரிய அளவில் சுற்று சூழல் பிரச்சனை ஏற்படும்.

      அனல் மின்சாரத்திற்குத் தேவைப் படும் நிலக்கரியை வெட்டி எடுப்பதின் மூலம்,விவசாய பாதிப்பு,பூகம்பம்,நிலநடுக்கம் போன்றவை ஏற்படுகின்றது. அதிலிருந்து வெளியேறும் அதிக அளவிலான புகையும் வாயு மண்டலத்தை மாசு படுத்துகிறது.ஓசோனில் ஓட்டையை பெரிதாக்குகிறது.

      அதோடு நிலக்கரி ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் தீர்ந்து விடும்.

      இவை எல்லாவற்றிற்குமான மாற்று ஏற்பாடாகத்தான் அணு மின் நிலையம் காட்சியளித்தது.

      அணு மின் நிலைத்திலிருந்து கதிர்கள் வெளியேறினாலோழிய வேறெந்த பாதிப்பும் இல்லை.

      ஆனால் அதிலிருந்து கதிர்கள் வெளியேறினால் பல தலைமுறைகளை பாதிக்கும் என்பதும் மறுக்க முடியாத உண்மை.

      1942 இல் வீசப்பட்ட little boy அணுகுண்டின் தாக்கம் இன்றும் ஜப்பானில் வெளிப்படுகின்றது என்றால் அதன் வீரியம் எவ்வளவு என்பது புரியும்.

      அணு, அனல் மின்சாரமன்றி வேறெந்த வழியிலும் நிரந்தரமாக மின்சாரம் பெற முடியாத என்றால் சூரிய மின்சாரம் மட்டுமே.ஆனால் துரதிஷ்டவசமாக சூரியன் மூலம் மிசாரம் பெரும் தொழில் நுட்பத்தில் நம் உலகம் இன்னும் உச்சத்தை எட்டவில்லை.

      ஒரு மின்சார மோட்டார் இயங்கத் தேவையான சூரிய மின்சாரம் தயாரிக்க 15,00,000 மேல் செலவாகின்றது என்றால் சூரிய மின்சார தொழில் நுட்பம் இன்னும் எட்டக் கணியாக உள்ளது என்றுதானே அர்த்தம்.

      இன்னும் 25 ஆண்டுகளுக்கு ஆபத்தானவன் என்றாலும் அணு மின்சாரமே ஆபந்தானவன்

      Delete
    2. நம்முடைய "தமிழில் எழுதுவது எப்படி" என்ற தகவல் பாடசாலையிலும் வெளியிட்டுள்ளார்கள்.

      நிறைய அலைபேசி அழைப்புகள் ,"பாடசாலையில் நீங்கள் எழுதிய தகவல் பயனுள்ளதாக இருந்தது" என்று கூறியதன் மூலமே பாடசாலையிலும் நமது தகவல் வெளியானது தெரிந்தது.

      பலருக்கு அந்த செய்தி சென்று சேர்ந்ததில் மகிழ்ச்சியே!

      Delete
    3. பார்த்தேன் மிக நல்ல செய்தி இன்றைய நாட்களில் நிறையநபர்கள் தமிழில் பதிவதை பற்றிய எளிய வழிகளை தெரியாமல் இருகின்றனர்..அவர்களுக்கும் தமிழில் பதிவிடவேண்டும் என்ற ஆர்வம்...அதற்க்கு சரியான வழிகாட்டியாக இது இருக்கும்...

      Delete
    4. சூரிய சக்தி மோட்டார் பற்றிய உங்கள் கருத்துமிக தவறானது.... இன்றைய நாட்களில் 1,00,000ருபாய் செலவில் 80% மானியத்தில் விவசாய நிலத்திற்கான மோட்டார்கள் பொருத்திதரப்படுகின்றது..

      இதை Sky Light Solar Energy Solution என்ற அமைப்பு செய்து கொடுக்கிறது....

      Delete
    5. சூரிய சக்தி மோட்டார் பற்றிய என்னுடைய கருத்து மிகத் தவறானதாக தெரியவில்லை.

      நான் விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவன் அதோடு எனக்கு எலக்டிரானிக்ஸ் குறித்து சிறிது அனுபவ அறிவும் உண்டு.

      சாதாரணமாக விவசாய மோட்டார் மின் இணைப்பை வாங்குவதற்கே 100,000 தாண்டி விடும்.இது போக AE,JE,wire man களுக்கு லஞ்சம் கொடுப்பதை சேர்த்தால் கணக்கு அதிகமாகும்.

      நிலமை இப்படி இருக்கும் போது நீங்கள் குறிப்பிடுவதைப் பார்த்தால் 100,000 ரூபாயில் அரசு மானியம் 80% ஆனா 80,000 போக வெறும் 20,000 ஆயிரம் இருந்தாலே விவசாயத்திற்கு தேவையான மின்சாரசத்தை தயாரித்து விடலாம் என்று சொல்கிறீர்கள்.

      இந்த ஒரு நிலை தமிழகத்துக்கு வந்தால் தமிழககத்தில் மின் பற்றாக்குறையே இருக்காது.

      அனல்,புனல்.அணு மின் நிலையங்கள் செயல்பட வேண்டிய அவசியமில்லை.முற்றிலும் சூரிய ஒளியிலேயே நம் தேவையை பூர்த்தி செய்து கொள்ளலாம்.

      தமிழக அரசு மின் நிலையங்கள்,மத்திய அரசு தரும் மின்சாரம்,தமிழ் நாட்டில் உள்ள தனியார் மின் நிலையங்கள் இவற்றிலிருந்து கிடைக்கும் மின்சாரம் போன்றவற்றின் மூலம் கிடைக்கும் மின்சாரம் பற்றாமல் பக்கத்து மாநிலங்களிலிருந்து அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்கி மானிய விலையில் நமக்கு மின்சாரம் வழங்க வேண்டிய அவசியம் இல்லை.

      நட்டத்தில் இயங்கும் மின் துறைக்கு ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரம் கோடி ரூபாய் மானியமாக கொடுத்தும் தமிழகத்தில் மின் வெட்டு நம்மை வெட்டுகிறது.

      சென்ற ஆண்டு மட்டும் தமிழக அரசு 10,000 கோடி மின் துறைக்கு மானியம் அளித்தாக செய்தி வந்தது.

      ஒரு வீட்டுக்கு தேவையான மின்சாரத்தை முழுவதும் சூரிய ஒளி மூலமே பெற வேண்டுமானால் 6,00,000 ரூபாய் செலவு செய்ய வேண்டும்.

      கடலூரை சேர்ந்த ஒரு விவசாயி இம்முறையை செயல்படுத்தியுள்ளார்.

      வீட்டுக்கு ஒரு முனை மின்சாரம்(single phase) மின்சாரம் இருந்தாலே போதும் அதற்கே இந்த செலவு.

      ஆனால் விவசாயத்திற்கு உபயோகிக்கப் படும் மின் மோட்டாருக்கு மும்முனை ( 3 phase) மின்சாரம் தேவை.அதாவது வீட்டிற்குத் தேவையான மின்சாரத்தைப் போல இரண்டு மடங்கு விட அதிகம் தேவை.

      தமிழகத்தில் 21/2 HP முதல் 10 HP வரை விவசாயத்திற்கு அனுமதி வழங்கப் படுகிறது.இதில் 10 HP இன்னும் சற்று அதிக மின்சாரத்தை குடிக்கும் சாதனமாகும்.

      கோவையில் ஒரு விவசாயி 10,00,000 ரூபாயீல் விவசாயத்திற்குத் தேவையான சூரிய ஒளி மின் நிலையம் அமைத்துள்ளார்.ஆனால் அதுவே பற்றாக்குறையாக உள்ளது. அதாவது வெயில் நேரத்தில் அதிக மின்சாரசமும் மாலை வேளையில் குறைவான மின்சாரமும் உற்பத்தியாகிறது.

      தமிழக அரசு வீட்டிற்கும்,விவசாயத்திற்க்கும் தேவையான சூரிய ஒளி மின் நிலையம் அமைக்கும் பொது மானியம் தருவது உண்மைதான்.ஆனால் அது 80 % அல்ல 50% சதவீதம்.

      வீட்டில் நேரிடும் பகுதி நேர மின்வெட்டை போக்கத் தேவையான inverter அமைக்கவே 25,000 ரூபாய் செலவு செய்ய வேண்டியுள்ளது.

      ஆனால் நீங்கள் வெறும் 20,000 ஆயிரம் இருந்தால் விவசாயத்திற்குத் தேவையான மின்சாத்தை தயாரித்து விடலாம் என கூறுவது சாத்தியமல்ல.

      Delete
    6. நான் 20,000 ருபாய் போதும் என்று சொல்லவில்லை விவசாயிகளின் பங்களிப்பாக 1,00,000 பெற்றுக்கொண்டு Sky Light Solar Energy Solution என்ற அமைப்பு இதை செய்து கொடுக்கிறது என்றுதான் சொன்னேன் இந்த Sky Light Solar Energy Solution அமைப்பின் முகவரிக்கு சென்றுபார்த்தாலே இதற்க்கான தகவல்கள் கொடுக்கபடிருக்கும்...அதுமட்டுமில்லாமல் நீங்கள் சொன்னபடி இரவில் ..மலையில் சூரிய ஒளிகிடயாது என்று ஒரு சில விவசாயிகள் இதை பயன்படுத்தமுடியாது என்று எண்ணி முற்றிலும் ஒதுக்காமல் கொஞ்சம் யோசித்து கிணற்றினை ஒட்டி ஒரு நீர்தேக்க தொட்டி கட்டி அதில் நீரை மதியநேரத்தில் சேமித்து மாலை மற்றும் அதிகாலை நேரங்களில் பயன்படுத்துகிறார்கள் இதை பற்றிய செய்தி ஏற்கனவே புதிய தலைமுறை செய்தியிலும் வந்துள்ளது...

      இத்துடன் அந்நிறுவனத்தின் செய்தியையும் கொடுக்கிறேன்...
      ஆனால் இது எந்தளவிற்கு உண்மையென்பது எனக்கும் தெரியவில்லை...ஏனென்றால் இவர்கள் விவசாயிகளின் பங்களிப்பு தொகையை முதலில் செலுத்த சொல்லுகிறார்கள்...இதுதான் இங்கு பின்னடைவை தருகிறது
      விவசாயிகளின் நீர்ப்பாசன தேவையை பூர்த்தி செய்யும் வகையில் மரபுசாரா எரிசக்தியில் இயங்கக்கூடிய பம்ப் மூலம் பாசன வசதி ஏற்படுத்தி தருதல், இயற்கையாக கிடைக்கும் சூரிய சக்தியை விவசாய நீர்ப்பாசனத்துக்கு உபயோகிக்க வழிவகை செய்யப்பட உள்ளது. 2013-14ம் ஆண்டில் விவசாய பணிகளுக்கு ஆழ்துளை கிணற்றில் இருந்து நீர் இறைப்பதற்கு வசதி செய்து கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. சோலார் பம்ப் 5 எச்பி ஏசி நீர்மூழ்கி பம்ப் அமைக்க ரூ.5 லட்சம் செலவாகும்.

      இதற்காக, தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 50 சதவீத மானியம், தமிழ்நாடு எரிசக்தி முகமை மூலம் 30 சதவீத மானியம் என 80 சதவீத மானியம் வழங்கப்படுகிறது. மீதமுள்ள 20 சதவீதம் ரூ.1 லட்சம் விவசாயிகள் பங்களிப்பாகும். சோலார் பம்ப் மானியத்தில் பெற விரும்பும் விவசாயிகள் பெயர், முகவரி, அடையாள அட்டைநகல், சிட்டா அடங்கல் நகல், நில வரைபடம் மற்றும் விவசாயிகளின் பங்களிப்பு தொகையை செலுத்தி பதிவு செய்யலாம். முன்னுரிமை அடிப்படையில் சோலார் பம்ப் அமைத்து கொடுக்கப்படும். மேலும் விவரங்களுக்கு

      சோலார் மின் உற்பத்தி சாதனங்கள் குறித்த ஆலோசனை மற்றும்
      தகவல்களுக்கு:-
      SKY Light Solar Energy Solutions
      Mobile: +919698045045

      Delete
  4. இந்தியாவின் பிருத்வி 2 ஏவுகணைச் சோதனை இன்று வெற்றிபெற்றது......

    அணு ஆயுதத்தை தாங்கி செல்லும் பிருத்வி 2 ஏவுகணை இன்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.ஒடிசாவில் உள்ள பாலாசூர் மாவட்டத்தில் அமைந்திருக்கும் சந்திப்பூர் ஏவுகணை சோதனை மையத்தில் இன்று காலை 9.44 மணிக்கு பிருத்வி 2 ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. இந்த ஏவுகணை தரையில் இருந்து தரை இலக்கை தாக்க கூடியது. அணு ஆயுதத்தையும் தாங்கி சுமார் 350 கிமீ தூரம் தாண்டி சென்று இலக்கை தாக்கும் திறனுடையது.

    ஏற்கனவே பிருத்வி 2 ஏவுகணை கடந்த ஆண்டு டிசம்பர் 3 மற்றும் கடந்த ஜனவரி 7ம் தேதிகளில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. பிருத்வி ஏவுகணை உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டது. 500 கிலோ எடையுள்ள வெடிகுண்டை தாங்கி சுமார் 43 கிமீ உயரம் வரை பறந்து சென்று 8 நிமிடங்களில் இலக்கை தாக்கும் திறனுடையது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ReplyDelete
  5. பார்த்தேன் மிக நல்ல செய்தி இன்றைய நாட்களில் நிறையநபர்கள் தமிழில் பதிவதை பற்றிய எளிய வழிகளை தெரியாமல் இருகின்றனர்..அவர்களுக்கும் தமிழில் பதிவிடவேண்டும் என்ற ஆர்வம்...அதற்க்கு சரியான வழிகாட்டியாக இது இருக்கும்...

    ReplyDelete
  6. Dear tet p2 physics passed teachers, pls open http://tntetphy.blogspot.com and add ur tet details.And also forward this to ur friends to enroll more entries. thank u.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி