நோட்டாவுக்கு தலைகீழ் கட்டைவிரல் சின்னம்: தேர்தல் ஆணையம் பரிசீலனை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 27, 2014

நோட்டாவுக்கு தலைகீழ் கட்டைவிரல் சின்னம்: தேர்தல் ஆணையம் பரிசீலனை.




தேர்தலில் வேட்பாளர்களுக்கு சின்னங்கள் வழங்கப்படுவது போல, நோட்டாவுக்கு தலைகீழ் கட்டைவிரல் சின்னம் வழங்க பரிசீலனை செய்வதாக தேர்தல் ஆணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
மேற்கூறிய நபர்கள் யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்பதைக் குறிப்பதற்கு கட்டைவிரல் தலைகீழாக இருப்பது போன்ற சின்னத்தை வடிவமைக்க பரிசீலிப்பதாக தேர்தல்ஆணையம் தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக வழக்குரைஞர் எஸ்.சத்யச்சந்திரன் உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

இதுகுறித்த விசாரணையில் தேர்தல் ஆணையம் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர் கட்டைவிரல்தலைகீழாக இருப்பது போன்று அதன் சின்னத்தை வடிவமைப்பதற்கு தேர்தல் ஆணையம் பரிசீலனை செய்யும் என தெரிவித்தார்.

8 comments:

  1. மார்ச் 27; விண்வெளிக்கு சென்ற முதல் மனிதர் யூரி ககாரின் நினைவு தினம் இன்று..

    யூரி ககாரின் (Yuri Gagarin) ரஷ்யா நாட்டுச் சிறுவன். ரஷ்ய மொழியில் ககாரின் என்றால், காட்டு வாத்து என்றொரு அர்த்தம் உண்டு. ஆனால், பிற்காலத்தில் 'வான் கழுகு’ எனத் தான் போற்றப்படுவோம் என்பது அந்தச் சிறுவனுக்குத் தெரியாது.

    ககாரின் அப்பாவுக்கு, தச்சு வேலை. உலகப் போர் சமயத்தில், ககாரினுடைய ஊர் முழுக்க ஹிட்லரின் படையால் துவம்சம் ஆனது. அப்பா, ராணுவத்துக்குச் சென்றார். ஊரே பயத்தில் இருக்க, குட்டிப் பையன் ககாரினோ, பறக்கும் பலவகை விமானங்களைப் பார்த்து, கண்கள் விரியச் சிரித்தான். ''நானும் இதைப்போல பறக்க வேண்டும்'' என்று அம்மாவிடம் சொன்னான்.

    அந்தச் சமயத்தில், பக்கத்து ஊரில் நடந்த விமான சாகசக் கண்காட்சியைக் கண்டான். அம்மாவிடம் அடம்பிடித்து, ஏரோ கிளப்பில் சேர்ந்தான். காற்றில் மிதந்தபோது, ''இதுதான் நம் வாழ்க்கை'' என முடிவு செய்துகொண்டான்.

    அரசாங்க விமானப் பயிற்சியில் சேர்ந்து, சிறப்பாகத் தேர்வுபெற்று, துடிப்பான இளைஞனாக மாறினார், யூரி ககாரின். ரஷ்யாவும் அமெரிக்காவும் 'நீயா... நானா?’ எனப் பல முனைகளில் மோதிக்கொண்டிருந்தன. அதில் ஒன்று, விண்வெளிக்கு யார் முதலில் மனிதனை அனுப்பி சாதிப்பது என்பது.

    ரஷ்யாவின் முயற்சியில் ககாரின், விண்வெளிக்கு முதல் மனிதராகப் பயணம் போனார். ஏப்ரல் 12, 1961-ல் வாஸ்டோக் 1 என்ற விண்கலத்தில் பயணம்செய்து, விண்வெளியில் நடந்தார். 108 நிமிடங்கள் நீடித்த அந்தச் சாகசம், ககாரினை உலக ஹீரோ ஆக்கியது. ரஷ்ய நாடு முழுக்க பல தெருக்களுக்கு இவரின் பெயர் சூட்டப்பட்டது. பிறகு, எண்ணற்ற பைலட்களுக்கு விண்கலப் பயணத்துக்கான பயிற்சி வழங்கிக் கொண்டிருந்தார்.

    இவரது 34 வயதில் அந்தத் துயரம் நடந்தது. 1968 மார்ச் 27-ல் நடந்த ஒரு விமான விபத்தில், யூரி ககாரின் மரணமடைந்தார்.‘Under the wide and starry sky; Dig the grave and let me lie’ எனும் ஸ்டீவன்சன் வரிகள், இவருக்கு அஞ்சலியாக ஒலித்திருக்கும் வான்வெளியில்!

    ReplyDelete
    Replies
    1. So sad, during earlier(younger) age, he lost life. Let us pray that soul rest in peace.

      Delete
  2. dear TET P II physics passed friends pls enroll yr tet weightage mark, dob,community,district in the new block created by mein the http:// tntetphy.blogspot.coms.p.lingam, wt 72, dob 1975, bc,namakkal.

    ReplyDelete
  3. Dear all,

    At the maximum, we try to avoid NOTO Button, Please choose the right candidate who will do the favour for public

    ReplyDelete
    Replies
    1. i came to know from TET procedure that there is no suitable person in this election. No one supports above 90 marks in TET candidates. All are trying to get vote bank by spoiling our dream therefore how can we vote for anyone. From my view there is no right politician so i vote for NOTA...... believe yourself but not others. So vote for NOTA and give greedy politicians tata

      Delete
    2. They Might Not Aware about our Problems.
      If they know the Importance of this Issue, they may help us.

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி