வெயில் தாக்கம் அதிகரிப்பு துவக்கப்பள்ளிகளில் நேரத்தை மாற்ற ஆசிரியர்கள் கோரிக்கை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 28, 2014

வெயில் தாக்கம் அதிகரிப்பு துவக்கப்பள்ளிகளில் நேரத்தை மாற்ற ஆசிரியர்கள் கோரிக்கை


வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதால், அரசு துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளின் வேலைநேரத்தை,
குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும், ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தமிழகத்தில், கோடை காரணமாக, நாளுக்கு நாள் வெப்பநிலை அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
பல இடங்களில், நிலத்தடி நீர்மட்டம் காணாமல் போய் விட்டதால், தண்ணீர்பஞ்சமும் தலைதூக்கி வருகிறது. இந்நிலையில், உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கும், தனியார் பள்ளி மாணவர்களுக்கும் இறுதி தேர்வுகள் நடந்து வருகிறது.துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு, 220 நாட்கள் வேலைநாட்களாக அரசாணை உள்ளதால், ஏப்ரல் மாதம், 30ம் தேதி வரை பள்ளிகள் செயல்பட வேண்டும், என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 10ம் வகுப்பு தேர்வின் நேரத்தை, வெயில் காரணமாக மாற்றியுள்ள நிலையில், துவக்கப்பள்ளி செயல்படும் நேரத்தையும் மாற்றியமைக்க வேண்டும், என ஆசிரியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இது குறித்து அரசு துவக்கப்பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது:வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரிப்பதால், மாணவர்கள் பல அவதிகளுக்கு உள்ளாகின்றனர். பெரும்பாலான துவக்கப்பள்ளிகளில் மின் விசிறி மற்றும் மின்சாரம் உள்ளிட்டவை இருப்பதில்லை. இதனால், துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளி மாணவர்களின் வேலை நேரத்தை காலை, 8.30 மணி முதல் மதியம், 1 மணி வரையாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், முன்னதாகவே தேர்வு நடத்தி அனைத்து பள்ளிகளை போலவும், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் விடுமுறை அளிக்க முன்வர வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

5 comments:

  1. மார்ச் 28: தீரர் சத்யமூர்த்தி நினைவு தினம் இன்று

    இந்திய விடுதலை போராட்ட வீரர். இந்திய அரசியலில் மக்களாட்சி நெறிமுறைகள் ஆழமாக வேரூன்ற பாடுபட்டவர்.தமிழக காங்கிரசின் வளர்ச்சிக்கும் அக்கட்சி வெற்றிபெறவும் உழைத்தவர். அவரை நினைவுகூறுமுகமாக சென்னையிலுள்ள காங்கிரசு கட்சியின் தமிழகத் தலைமையகம் அவரது பெயர்கொண்டு சத்தியமூர்த்தி பவன் என அழைக்கப்படுகிறது

    மிகச் சிறந்த பேச்சாளரும் சிறந்த நாடாளுமன்ற வாதியும் ஆன சத்தியமூர்த்தி அவர்களைத் தான் காமராசர் தன் அரசியல் குருவாக ஏற்றுக் கொண்டிருந்தார்

    ReplyDelete
    Replies
    1. மார்ச் 28: உலக புகழ்பெற்ற 'தாய்' நாவலை எழுதிய மாக்சிம் கார்க்கி பிறந்த தினம் இன்று

      1930 இதே நாளில் தான் இஸ்தான்புல் நகரம் உருவாக்கப்பட்டது....
      துருக்கியின் கொன்ஸ்தாந்திநோபிள், அங்கோரா ஆகிய நகரங்கள் முறையே இஸ்தான்புல், அங்காரா என பெயர்மாற்றப்பட்டன.

      Delete
  2. T20 உலககோப்பை ஸ்டம்புகள் பற்றிய ஒரு செய்தி....

    வங்கதேசத்தில் நடந்து வரும் 20-20 உலக கோப்பை போட்டியில், முதல் முறையாக ஒளிரும் ஸ்டம்புகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஸ்டம்பிலும், அதன் மீது வைக்கப்பட்டிருக்கும் இரண்டு பெய்ல்சிலும் குறைந்த மின்அழுத்தம் கொண்ட பேட்டரிகளுடன், எல்.இ.டி. பல்புகள் பொருத்தப்பட்டுள்ளன.
    பந்து தாக்கி பெய்ல்ஸ் கீழே விழுந்ததும் சில வினாடிகள் அது ஜொலிக்கிறது. பெய்ல்ஸ்சில் இருந்து அனுப்பப்படும் ரேடியோ சிக்னல் மூலம் ஸ்டம்பும் சிவப்பு நிறத்தில் மின்னுகிறது.

    ஒளிரும் ஸ்டம்பு தொழில் நுட்பம் சர்ச்சைக்குரிய அவுட்டுகளுக்கு தீர்வு காண வசதியாக இருப்பதோடு, ரசிகர்களுக்கும் இது புது அனுபவமாக அமைந்துள்ளது. பொதுவாக பெரிய போட்டிகளில் வெற்றி வாகை சூடினால், உடனடியாக ஸ்டம்பை ஆக்ரோஷமாக பிடுங்கிக் கொண்டு வீரர்கள் ஆர்ப்பரிப்பது வழக்கம். ஆனால் தற்போது வடிவமைக்கப்பட்டுள்ள ஸ்டம்புகள் மற்றும் பெய்ல்ஸ்களின் விலை ரூ.25 லட்சமாம். இதனால் வெற்றி கொண்டாட்டத்தின் போது ஸ்டம்புகளை பிடுங்குவதற்கு அனுமதி கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

    ReplyDelete
  3. தங்களது பயனுள்ள தகவல்களுக்கு கல்விச்செய்தியின் மனமார்ந்த நன்றி.

    ReplyDelete
    Replies
    1. நன்றி நாங்கள் தான் உங்களுக்கு சொல்லவேண்டும் நண்பரே..இவ்வளவு பயனுள்ள வலைதளத்தை அமைத்து அதில் நல்லகருதுக்களை தினம் தினம் பதிந்து எங்களுக்கு தேவையான செய்திகளையும் அன்றன்றே தருகிறீர்கள் அல்லவா....நன்றி...

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி