பத்தாம் வகுப்புத் தேர்வு: தத்கல் முறையில் விண்ணப்பித்தவர்களுக்கு நாளை முதல் ஹால் டிக்கெட் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 19, 2014

பத்தாம் வகுப்புத் தேர்வு: தத்கல் முறையில் விண்ணப்பித்தவர்களுக்கு நாளை முதல் ஹால் டிக்கெட்


சிறப்பு அனுமதித் திட்டத்தின் (தத்கல்) கீழ் பத்தாம் வகுப்பு தேர்வு எழுத விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் நாளை (மார்ச் 20) முதல் தங்களுக்கான ஹால் டிக்கெட்டைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் www.tndge.in என்ற இணையதளத்திலிருந்து மாணவர்கள் ஹால் டிக்கெட்டைப் பதிவிறக்கம் செய்யலாம்.இவர்களுக்கான அறிவியல் பாட செய்முறைத் தேர்வு மார்ச் 20, 21 தேதிகளில் நடைபெற உள்ளது. சிறப்பு அனுமதித் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்துள்ள தனித்தேர்வர்கள் பதிவிறக்கம் செய்யப்பட்ட ஹால் டிக்கெட், அறிவியல் செய்முறை பதிவேடு ஆகியவற்றுடன் செய்முறைத் தேர்வுக்கு வர வேண்டும். ஏற்கெனவே செய்முறைப் பயிற்சி பெற்ற பள்ளிகளிலேயே இவர்கள் செய்முறைத் தேர்வில் பங்கேற்க வேண்டும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி