தினசரி செய்திகளில் நமக்கு தேவையான பகுதி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 18, 2014

தினசரி செய்திகளில் நமக்கு தேவையான பகுதி


தினசரி செய்திகளில் நமக்கு தேவையான பகுதி

 

 

மலேசிய விமானம் விபத்துக்குள்ளாகவில்லை: ஐ.நா. கண்காணிப்பு அமைப்பு


 மாயமான மலேசிய விமானம் எங்கேயாவது மோதியோ, நடுவானில் வெடித்துச் சிதறியோ விபத்துக்குள்ளாகியிருக்க வாய்ப்பில்லை என சிடிபிடிஓ கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

வியன்னாவை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது சிடிபிடிஓ அமைப்பு, அணுஆயுத சோதனைகள் தடுப்பதற்காக உருவாக்கப்பட்டது இந்த அமைப்பு.

ஐ.நா. சபையின் ஆதரவோடு இயங்கும் இந்த அமைப்பு, மாயமான மலேசிய விமானம் எங்கேயாவது மோதியோ, நடுவானில் வெடித்துச் சிதறியோ விபத்துக்குள்ளாகியிருக்க வாய்ப்பில்லை என தெரிவித்துள்ளது. இத்தகவலை ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூனின் செய்திதொடர்பாளர் ஸ்டெபானி டுஜாரிக் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், "சிடிபிடிஓ அமைப்பு, சரவ்தேச கண்காணிப்பு தொழில் நுட்பங்களை பயன்படுத்தி விமான விபத்துக்களை 3 அல்லது 4 வழிகளில் உறுதிப்படுத்துகிறது

. இந்த அமைப்பின் கண்காணிப்பு உபகரணங்கள் அணுஆயுத சோதனையை கண்டறிவதோடு, பெரிய அளவிளான விமான விபத்துகளையும் கண்டறிகிறது. உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் இந்த அமைப்பு உயர்தர சென்சார்களை நிறுவியுள்ளது. அணுஆயுதச் சோதனையோ, விமான விபத்தோ, பூகம்போ ஏற்பட்டால் உடனே அதன் தாக்கத்தை சென்சார்கள் பதிவு செய்கின்றன" என்றார்.

மேலும், இந்த மையம் பதிவு செய்துள்ள புள்ளி விபரங்கள் அடிப்படையில் விமானம் எங்கேயாவது மோதியோ, நடுவானில் வெடித்துச் சிதறியோ விபத்துக்குள்ளாகியிருக்க வாய்ப்பில்லை என கூறப்படுவதாக, அவர் தெரிவித்தார்.

மேற்கண்ட  இன்றைய செய்தியில் நமக்குத் தேவையான பகுதி

 அணு ஆயுத சோதனைகளை தடுப்பதற்காக உருவாக்கப் பட்ட அமைப்பு வியன்னாவை தலையிடமாக கொண்டு செயல்படும் சிடிபிடிஓ


அதாவது கேள்வி இப்படி வரலாம்

1)அணு ஆயுத சோதனைகளை தடுப்பதற்காக உருவாக்கப் பட்ட அமைப்பின் பெயர்  (அல்லது அதன் தலமையிடம் )என்ன?

a) CTATO      b)CTBTO           c)TCTBO               d)TTBCO

CTBTO என்பதன் விரிவாக்கம்
The Comprehensive Nuclear-Test-Ban Treaty Organization

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி