விடுமுறை நாளில் தேர்தல் பயிற்சி: ஆசிரியர்கள் அதிருப்தி. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 29, 2014

விடுமுறை நாளில் தேர்தல் பயிற்சி: ஆசிரியர்கள் அதிருப்தி.


அரசு விடுமுறை நாளில் தேர்தல் பயிற்சி நடத்தப்படுவதற்கு ஆசிரியர்கள் அதிருப்தி தெரிவித்தனர்.

மக்களவைத் தேர்தலையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் தேர்தல் பணிக்காக ஆசிரியர்கள், வருவாய்த் துறை, ஊரக வளர்ச்சித் துறை, வேளாண்மைத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த 7,215 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.ஏப்ரல் 24-ஆம் தேதி நடைபெறும் வாக்குப்பதிவு பணிகளில் அவர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இதையொட்டி, வாக்குப்பதிவு பணிகள் தொடர்பாக அவர்களுக்கு 4 கட்ட பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன.முதல்கட்ட பயிற்சி வகுப்புகள் மார்ச் 31-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக நாமக்கல், பரமத்திவேலூர், திருச்செங்கோடு, ராசிபுரம், சேந்தமங்கலம், மாணிக்கம்பாளையம், குமாரபாளையம் என மாவட்டம் முழுவதும் 7 இடங்களில் பயிற்சி வகுப்புகள் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.இந்த நிலையில், மார்ச் 31-ஆம் தேதி அரசு விடுமுறை நாள் (தெலுங்கு புத்தாண்டு) என்பதால், அன்றைய தினம் தேர்தல் பயிற்சி வகுப்புகள் நடத்துவதற்கு ஆசிரியர் தரப்பில் கடும் அதிருப்தி தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர்கள் கழக மாவட்டத் தலைவர் செ.மலர்கண்ணன் கூறியது:ஒவ்வொரு ஆண்டும் பணியாளர்களுக்கு கட்டாயமாக விடுமுறை அளிக்க வேண்டிய நாள்கள் குறித்து அரசே வகுத்தளித்துள்ளது.

இதில், தெலுங்கு புத்தாண்டும் ஒன்றாகும். இதைக் கருத்தில் கொண்டே தேர்தல் ஆணையமே வேட்புமனு தாக்கலை திங்கள்கிழமை நடத்தாமல் விடுமுறை அளித்துள்ளது.ஆனால், அரசு விடுமுறை நாளை மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகளே கண்டுகொள்ளாமல் அரசு ஊழியர்களை தேர்தல் பணிகளில் ஈடுபடுத்துவது வருத்தத்துக்குரியது. எனவே, அரசு விடுமுறை நாளில் தேர்தல் பயிற்சி வகுப்பு நடத்துவதைக் கைவிட்டு வேறொரு நாளில் நடத்த ஆசிரியர்கள் எதிர்நோக்கி உள்ளனர் என்றார் அவர்.இதுகுறித்து மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான வி.தட்சிணாமூர்த்திகூறியது:பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ஏப்ரல் 9-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.இதனால், மற்ற நாள்களில் தேர்தல் பயிற்சி வகுப்பு நடத்தினால் தேர்வுப் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களால் பயிற்சிக்கு வர முடியாது. தவிர, அந்த ஆசிரியர்களுக்கு தனியாக பயிற்சி அளிப்பதும் இயலாது.

மேலும், இது முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல் பயிற்சி என்பதால் காலம் தாழ்த்தாமல் நடத்த வேண்டியதும் அவசியமாகும். இவற்றைக் கருத்தில் கொண்டுதான் மார்ச் 31-ஆம் தேதி பயிற்சி வகுப்பை நடத்த திட்டமிடப்பட்டது. ஆசிரியர்களும் தாங்கள் ஈடுபடும் பணியின் முக்கியத்துவம் கருதி தேர்தல் பயிற்சி வகுப்பில் ஆர்வமுடன் பங்கேற்க வேண்டும் என்றார் அவர்.

9 comments:

  1. இன்றைய தின சிறப்புகள்....

    1857 - பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் வங்காள இராணுவத்தைச் சேர்ந்த மங்கல் பாண்டே என்றசிப்பாய் பிரித்தானிய ஆட்சிக்கெதிராக கிளர்ச்சியை ஆரம்பித்தார். இதுவே பின்னர் இந்திய விடுதலைப் போருக்கு முன்னோடியாக அமைந்தது.
    2007 - கணிதத்தில் நோபல் பரிசு எனப்படும் நோர்வே நாட்டின் ஏபல் பரிசு தமிழரான சீனிவாசவரதனுக்குஅறிவிக்கப்பட்டது.
    2004 - அயர்லாந்து புகைத்தலை உணவகங்கள் உட்பட எல்லா வேலையிடங்களிலும் தடை செய்த முதல்நாடானது.

    ReplyDelete
  2. இந்திய வரலாற்றில் மார்ச் 29 மிக முக்கிய நாள்...மீரத் எழுச்சியை மங்கள் பாண்டே நிகழ்த்திய தினம் இன்று...

    1857 இன் புரட்சியை ஆரம்பித்து வைத்த மீரத் எழுச்சியை மங்கள் பாண்டே நிகழ்த்திய தினம் மார்ச் இருபத்தி ஒன்பது. ஆரம்பிக்க முக்கிய காரணமான மங்கள் பாண்டே ரத்தில் வெடித்து வட மற்றும் மத்திய இந்தியா முழுக்க இந்த புரட்சி பரவியது . ஒற்றை நாளில் ஏற்பட்ட புரட்சி அல்ல அது ஆங்கிலேய கம்பெனி ஆதிக்கத்தின் நூறாண்டு கால ஆட்சியின் கொடுமைகளின் விளைவாகவே இது எழுந்தது

    ஒரு எண்பத்தி ஏழு காலத்துக்குள் பசி என்றால் என்னவென்றே அறியாத இந்தியாவின் பல பகுதிகளில் பெரிதாக பன்னிரெண்டு பஞ்சங்கள் ஏற்பட்டு இருந்தன . முக்கியமான காரணம் இந்தியாவின் விவசாயம் மற்றும் கைவினைத்தொழில்களை ஆங்கிலேய அரசு ஒட்டுமொத்தமாக காலி செய்து இருந்தது . நிலவரியை ஏகத்துக்கும் ஏற்றியது . ஜமிந்தார்களிடம் சிக்கிக்கொண்டு இருந்த மக்கள் இப்பொழுது லேவா தேவி காரர்களிடம் சிக்கி நிலங்களை இழந்தார்கள் . மாட்டுவண்டியை ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு கொண்டு செல்ல எட்டணா வரை வாங்கி கசக்கி பிழிந்தது அரசு

    இந்திய அரசர்கள் ஆண்ட பகுதிகளில் அப்பகுதி மக்கள் வேலை பெற்று வந்தார்கள் . அந்த பகுதியை ஆங்கிலேய அரசு கைப்பற்றினால் அங்கிருக்கும் பெரும்பாலான பதவிகள் ஆங்கிலேயர் வசம் போய்விடும் . அதைவிட கொடுமையான அம்சம் உயர் பதவிக்கு சில இந்தியர்கள் போனாலும் அவர்களால் அடிப்படை ஆங்கிலேய ஊழியன் வாங்கும் சம்பளத்தை கூட நினைத்து பார்க்க முடியாது


    எண்ணற்ற வருத்தங்களுக்கு நடுவே ராணுவ வீரர்களின் வருத்தங்கள் சேர்ந்து கொண்டன . கடல் கடந்து போவது முதல் சிக்கல் என்றால்,மத அடையாளங்களை வைத்துக்கொள்ள கூடாது என அறிவித்தது அடுத்த அடி . இஸ்லாமியர்களின் நம்பிக்கை மற்றும் இந்துக்களின் நம்பிக்கையை தாக்கும் வண்ணம் என்ஃபீல்ட் கேட்ரிட்ஜ்களில் மாட்டு மற்றும் பன்றி கொழுப்பு பயன்படுத்த பட்டிருந்தது . அதை கடித்து தான் லோட் செய்ய வேண்டும் . கூடவே ஆங்காங்கே மிகவும் கேவலமாக வீரர்கள் நடத்தப்பட்டார்கள் . ஒட்டுமொத்த படையில் அவாதின் வீரர்கள் மட்டும் எழுபத்தைந்து ஆயிரம் பேர் அவர்கள் கடும் வெறுப்பில் இருந்தார்கள் .

    முப்பது நான்காவது படைப்பிரிவில் பரக்பூரில் தான் சிக்கல் வெடித்தது. ஹெவ்சன் எனும் ஆங்கிலேய மேஜர் சார்ஜண்டுக்கு துப்பாக்கியை கடித்து லோட் செய்ய மறுத்து ஒரு வீரன் கிளர்ச்சி செய்வதாக செய்தி கிடைத்து. கிளம்பிப்போனார். முக்கியமான அதிகாரிகள் வேறு இல்லை; ஏற்கனவே வீரர்கள் கொதிநிலையில் இருந்தார்கள், ஹெவ்சன் அங்கே போனார். “நம் மத நம்பிக்கைக்கு எதிரான இந்த செயலை ஏன் செய்கிறீர்கள் ? வாருங்கள் கிளர்ச்சி செய்வோம் ” என்று மங்கள் பாண்டே குரல் கொடுத்துக்கொண்டு இருந்தான். ஹெவ்சன் கிட்டே வந்தார்,துப்பாக்கியை முடுக்கினான் . பதுங்கி தப்பித்துக்கொண்டார் அவர்

    ஜெனரல் போ வந்தார் ;குதிரைச் சத்தத்தைக் கேட்ட பாண்டே அங்கிருந்த பீரங்கியின் பின்னால் மறைந்து கொண்டு போவை நோக்கிச் சுட்டான். எனினும் அது குறி தவறி குதிரையைத் தாக்கியது[ அதிலிருந்து தப்பித்தாலும் பாண்டேவின் கத்தியால் இடது கை,கழுத்து ஆகியவற்றில் வெட்டு பெற்றார் போ. பாண்டே மேலும் தாக்காதவாறு ஷேக் போல்ட் தடுத்தார், அதற்கு பின்பு அந்த படைப்பிரிவின் எந்த வீரரும் மங்கள் பாண்டேவை கைது செய்ய மறுத்தார்கள், பின்னர் வேறு படை கொண்டு வந் பாண்டேவை கைது செய்த பின்பு அந்த முப்பத்தி நான்காம் படைப்பிவு கலைக்கப்பட்டது . பாண்டே ஏப்ரல் எட்டாம் தேதி தூக்கில் போடப்பட்டார்

    இதே நாளில் மீரத்தில் ஆங்கிலேய படையில் இருந்த சிப்பாய்கள் பொங்கி எழுந்தார்கள் . கூடவே விவசாயிகள்,எளிய மக்கள்,கைவினைஞர்கள் தங்களின் கோடரி,கத்தி,கடப்பாரை ஆகியவற்றோடு இணைந்து கொண்டார்கள் . பகதூர் ஷாவை இந்தியாவின் அரசர் என அறிவித்தார்கள் . ஹிந்து முஸ்லீம்கள் சகோதரர் போல இணைந்து வீரம் காட்டினார்கள் . எங்கெல்லாம் இடங்களை பிடித்தார்களோ அங்கெல்லாம் பசுவதை தடை செய்யப்பட்டது . எந்த கேட்ரிட்ஜ் உணர்வுகளை தட்டி எழுப்பியதோ அதையே அரசுக்கு எதிராக பயன்படுத்தினார்கள் வீரர்கள்

    பல சிக்கல்களுக்கு உள்ளானாலும் இந்த புரட்சி ஒரு வகையில் தனித்துவமானது . ஆங்கிலேய அரசுக்கு எதிராக அதற்கு முன்னதாகவே நாற்பதுக்கும் மேற்பட்ட எழுச்சிகள் நடந்திருக்கின்றன . ஆனால் எளிய மக்களும் புரட்சியில் கலந்து கொண்டது இதை மக்கள் புரட்சியாக ஆக்கிற்று . இந்த எண்ணிக்கை உங்களுக்கு ஒரு புரிதலை தரலாம் . ஒன்றரை லட்சம் பேர் அவாதில் ஆங்கிலேயே அரசை எதிர்த்து இறந்து போனார்கள் . அதில் ஒரு லட்சம் பேர் எளிய மக்கள் . இந்தியாவின் பெரும் விடுதலைக்கனலை உண்டு செய்த இந்த வீரப்போர் ஒரு வருடம் நீடித்தது . இது இறுதியில் தோல்வி அடைந்தாலும் இந்தியர்கள் ஒன்றும் கோழைகள் இல்லை என ஆங்கிலேய ஆதிக்கத்தின் நெற்றிப்பொட்டில் அடித்து சொன்ன புரட்சி இது.....

    ReplyDelete
  3. Tnpsc group 4 councelling special category... vacant filled details .... upto 28/3/2014.
    BC community...
    BC- ex-service men - 28 & PSTM - 24
    BC - widow - 20 & widow pstm - 07
    BC general blind - 07, deaf - 04, ortho - 08
    BC women blind - 02, deaf - 03, ortho-03.
    Total vacancy filled for special category = 113..

    ReplyDelete
  4. Tnpsc group 4 councelling...special category... vacant filled details ....
    General turn..
    Ex-service men - 37. & pstm - 15,
    Widow- 28. And pstm- 03,
    Blind general - 13, women - 02.
    Deaf - 07, women - 05.
    Ortho- 06, women- 03.
    Total= 116

    ReplyDelete
  5. பாட்டிலில் தண்ணீரை அடைத்து விற்பதை தடை செய்த முதல் நகரம் சான் பிரான்சிஸ்கோ தான்.
    தண்ணீர் அதிகளவில் வீணாவதை தடுப்பதற்காக, 9 மாதங்கள் போராடி தடை செய்துள்ளார்கள்.

    ஒவ்வொருவரும் தங்களுக்கென்று தனி தண்ணீர் பாட்டில் வைத்துக் கொண்டு, அரசாங்கம் அங்கங்கு வைத்திருக்கும் இலவச தண்ணீர் இயந்திரத்தில் பிடித்து கொள்ளலாம்.
    இதன் மூலம் தண்ணீர் வீணாகுவது தடுக்கப்படுகிறதாம்.
    இவர்கள் நாடும் பிளாஸ்டிக் குப்பைமேடாகுவதிலிருந்து தடுக்கப்படுகிறது...
    உண்மையில் மிக சரியான முயற்சியே...இன்றைய நாட்களில் இந்த பிளாஸ்டிக்பாட்டில்களாலும்...பை களாலும் நமது ஊரே குப்பைமேடாக காட்சியளிக்கிறது..

    ReplyDelete
  6. Pls any one share 2012 Tet posting cast wise detail. Don't mistake me

    ReplyDelete
  7. Pls any one share 2012 Tet posting cast wise detail. Don't mistake me

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி