சென்னை பல்கலையின் தேர்வுகளுக்கான முடிவுகள்,இன்று வெளியிடப்படுகிறது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 25, 2014

சென்னை பல்கலையின் தேர்வுகளுக்கான முடிவுகள்,இன்று வெளியிடப்படுகிறது.


சென்னை பல்கலையின் முதுகலை பட்டம், நூலகவியல் தேர்வுகளுக்கான முடிவுகள்,இன்று இரவு வெளியிடப்படுகிறது.இதுகுறிதது சென்னை பல்கலை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சென்னை பல்கலை, தொலைதூரகல்வி நிலையம் சார்பில், எம்.ஏ., - எம்.எஸ்.சி., - எம்.காம்., மற்றும் நூலகவியல் பட்டம்,முதுகலை பட்டம், சான்றிதழ் மற்றும் டிப்ளமோ படிப்புகளுக்கான தேர்வுகள், கடந்தாண்டு டிசம்பர் மாதம் நடத்தப்பட்டன. இத்தேர்வுகளுக்கான முடிவுகள், இன்று இரவு, 8:00மணிக்கு வெளியிடப்படுகிறது. தேர்வு முடிவுகளை,
www.ideunom.ac.in,
www.unom.ac.in,
www.kalvimalar.com,
www.indiaresults.com,
உள்ளிட்ட இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம்.நடப்பாண்டு மாணவர்கள், மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்கலாம்.

இதற்கு, 750 ரூபாய் கட்டணம் செலுத்தவேண்டும். இதற்கான விண்ணப்பம், தொலைதூரக் கல்வி மையத்தின், இணையதளத்தில் இருந்து பெறலாம்.விண்ணப்பத்தை, ஏப்.,7ம் தேதிக்குள், தொலைதூரக் கல்வி மையத்தில் அளிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி