விரைவில் ஆசிரியர் சங்கங்கள் இணைந்து, தமிழகத்தில் தனிக்கட்சி தொடங்க திட்டம்-Dinamani News - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 24, 2014

விரைவில் ஆசிரியர் சங்கங்கள் இணைந்து, தமிழகத்தில் தனிக்கட்சி தொடங்க திட்டம்-Dinamani News


தமிழகத்தில் உள்ள பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் ஒருங்கிணைந்து தனிக்கட்சி ஒன்றை விரைவில் தொடங்கவுள்ளது.தமிழகத்தில் உள்ள தனியார் உதவிபெறும் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள்,

பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளைச் சேர்ந்த ஆசிரியர் சங்கங்கள் ஒருங்கிணைந்து தமிழகத்தில் ஒரு தனி அரசியல் கட்சியாக பதிவு செய்யப்படவுள்ளது.

இதற்கான கொள்கைகள், சட்டத்திட்டங்கள், வரையரைகள், விதிமுறைகள் ஆகியவைகள் வகுக்கப்பட்டு வருகின்றன.சிதம்பரத்தை மையமாக கொண்டு, தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் ஆசிரியர் சங்கங்களை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

வருகிற ஏப்.20-ம் தேதி சென்னையில் அனைத்து சங்கங்களும் ஒருங்கிணைந்து மாநில அளவில் கூட்டத்தை கூட்டி, அதற்கான அறிவிப்பை வெளியிட உள்ளனர் என அச்சங்கங்களின் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் எம்எல்சியுமான சி.ஆர்.லட்சுமிகாந்தன் தெரிவித்தார்.

4 comments:

  1. நல்ல முடிவு. ரொம்ப லேட் ,இன்ன வேட்பாளர்களை நிறுத்தியிறுக்கனும்.

    ReplyDelete
  2. Super....great decision... we can show our strength to this govt.and politicians

    ReplyDelete
  3. nam vala nam aalanum very good

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி