TET-TNPSC :ஓரெழுத்து ஒரு மொழி சொற்கள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 24, 2014

TET-TNPSC :ஓரெழுத்து ஒரு மொழி சொற்கள்


அ-சுட்டெழுத்து, எட்டு, சிவன், விஷ்ணு, பிரம்மா
ஆ- பசு(ஆவு), ஆன்மா, இரக்கம், நினைவு, ஆச்சாமரம்
இ- சுட்டெழுத்து, இரண்டில் ஒரு பங்கு அரை என்பதின் தமிழ் வடிவம்.
ஈ- பறக்கும் ஈ, தா, குகை, தேனீ

உ-சிவன், ஆச்சரியம், சுட்டெழுத்து, இரண்டு என்பதின் தமிழ் வடிவம்
ஊ-இறைச்சி, உணவு, ஊன், தசை
எ-வினா எழுத்து, ஏழு என்பதின் தமிழ் வடிவம்
ஏ- அம்பு, உயர்ச்சிமிகுதி
ஐ-அழகு, உயர்வு, உரிமை, தலைவன், இறைவன், தந்தை
ஒ-மதகு, (நீர் தாங்கும் பலகை)
ஔ-பூமி, ஆனந்தம்
க-வியங்கோள் விகுதி
கா-காத்தல், சோலை
கி-இரைச்சல் ஒலி
கு-குவளயம்
கூ-பூமி, கூவுதல், உலகம்
கை-உறுப்பு, கரம்
கோ-அரசன், தந்தை, இறைவன்
கௌ-கொள்ளு, தீங்கு
சா-இறத்தல், சாக்காடு
சீ- லட்சுமி, இகழ்ச்சி, வெறுப்புச் சொல்
சு-விரட்டடுதல், சுகம், மங்கலம்
சே-காலை
சை-அறுவறுப்பு ஒலி, கைப்பொருள்
சோ- மதில், அரண்
ஞா- பொருத்து, கட்டு
தா- கொடு, கேட்பது
தீ-நெருப்பு , தீமை
து-உண்
தூ-வெண்மை, தூய்மை
தே-கடவுள்
தை-தமிழ்மாதம், தைத்தல், பொருத்து
நா-நான், நாக்கு
நி- இன்பம், அதிகம், விருப்பம்
நீ-முன்னிலை ஒருமை, நீக்குதல்
நூ- யானை, ஆபரணம், அணி
நே- அன்பு, அருள், நேயம்
நை- வருந்து
நோ- துன்ப்பபடுதல், நோவு, வருத்தம்
நௌ- மரக்கலம்
ப-நூறு
பா- பாட்டு, கவிதை
பூ- மலர்
பே- நுரை, அழகு, அச்சம்
பை- கைப்பை
போ
செல், ஏவல்
ம- சந்திரன், எமன்
மா- பெரிய, சிறந்த, உயர்ந்த, மரம்
மீ- மேலே , உயர்ச்சி, உச்சி
மூ- மூப்பு, முதுமை
மே- மேல்
மை- கண்மை (கருமை), அஞ்சனம், இருள்
மோ- மோதல், முகரதல்
ய- தமிழ் எழுத்து எனப்தின் வடிவம்
யா- ஒரு வகை மரம், யாவை, இல்லை
வ- நாலில் ஒரு பங்கு "கால்" என்பதன் தமிழ் வடிவம்
வா- வருக, ஏவல்
வி- அறிவு, நிச்சயம், ஆகாயம்
வீ- மலர் , அழிவு
வே- வேம்பு, உளவு
வை- வைக்கவும், கூர்மை
வௌ- வவ்வுதல்
நோ- வருந்து
ள- தமிழெழுத்து நூறு என்பதன் வடிவம்
ளு- நான்கில் மூன்று பகுதி, முக்கால் என்பதன் வடிவம்
று- எட்டில் ஒரு பகுதி அரைக்கால் எனபதன் வடிவம்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி