பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு புதிய பாடத்திட்டம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 18, 2014

பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு புதிய பாடத்திட்டம்.


பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு புதிய பாடத்திட்டம் தயாராகி உள்ளது. அதற்கான அரசு அனுமதி வந்த உடன் பாடம் எழுதப்பட உள்ளது.
தமிழ்நாட்டில் 5 வருடத்திற்கு ஒரு முறை பள்ளிக்கூட மாணவர்களுக்கு பாடத்திட்டம்மாற்றப்படுகிறது. புதிய தொழில்நுட்பம், மாணவர்களின் வேலைவாய்ப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு பள்ளி கல்வித்துறை புதிய பாடத்திட்டத்தை தயாரிக்கிறது.அதன்படி பிளஸ்-1, பிளஸ்-2 பாடப்புத்தம் தயாரித்து 5 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. அதனால் புதிய பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டு விட்டது. இந்த பாடத்திட்டம் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரி ஆசிரியர்கள், பள்ளிக்கூட ஆசிரியர்களால் தரமாக தயாரிக்கப்பட்டு அரசின் அனுமதிக்கு அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது. அரசின் அனுமதி கிடைத்ததும் பாடம் எழுதப்படும்.

பின்னர் புத்தகம்அச்சடிக்கப்படும்.2015-2016-ம் ஆண்டு பிளஸ்-1 மாணவர்களுக்கும் 2016-2017-ம் ஆண்டு பிளஸ்-2 மாணவர்களுக்கும் இந்த புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது.

1 comment:

  1. sir, please recommend internal marks 50 for Maths & Business Maths subjects in the new syllabus. thanks

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி