பூமியை போன்றே உயிர்கள் வாழ ஏற்ற சூழல் கொண்ட புதிய கிரகம் கண்டுபிடிப்பு - கெப்ளர் 186F எனப் பெயர் சூட்டியுள்ளனர் நாசா விஞ்ஞானிகள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 27, 2014

பூமியை போன்றே உயிர்கள் வாழ ஏற்ற சூழல் கொண்ட புதிய கிரகம் கண்டுபிடிப்பு - கெப்ளர் 186F எனப் பெயர் சூட்டியுள்ளனர் நாசா விஞ்ஞானிகள்

பூமியை போன்றே உயிர்கள் வாழ ஏற்ற சூழல் கொண்ட புதிய கிரகம் ஒன்றை, நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதற்கு கெப்ளர் 186F எனப் பெயரிடப்பட்டுள்ளது.


அண்டவெளியில் பூமியைத் தவிர, வேற்று கிரகங்களில் உயிர்கள் வாழ வாய்ப்புள்ளதா என்பது குறித்து விஞ்ஞானிகள் தீவிர ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றனர். பல்வேறு கிரகங்களை ஆராய கெப்ளர் தொலைநோக்கி விண்வெளியில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

                                   undefined

இந்தத் தொலைநோக்கியைப் பயன்படுத்தி, ஆய்வு மேற்கொண்ட அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள், பூமியில் உள்ளது போன்றே உயிர்வாழ ஏற்ற சூழல் நிலவும் புதிய கிரகம் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இது ஏறத்தாழ பூமியின் அளவில் உள்ளது. இங்கு தண்ணீர் இருப்பதற்கான வாய்ப்புகளும் கண்டறியப்பட்டுள்ளன.

இந்த கிரகம் பூமியில் இருந்து 500 ஒளிஆண்டுகளுக்கு அப்பால் உள்ளது. இது நமது சூரியனைவிட அளவில் சிறிய சூரியன் ஒன்றை சுற்றி வருகிறது. பூமிக்கு சூரியனிலிருந்து கிடைக்கும் வெப்பத்தைப் போன்றே, இந்த புதிய கிரகத்திற்கும் வெப்பம் கிடைத்து வருவதால், இங்கு மனிதர்கள் உட்பட ஜீவராசிகள் வாழ்வதற்கான வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்தப் புதிய கிரகத்திற்கு கெப்ளர் 186F எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

4 comments:

  1. கெப்ளர் 186F என்ற பெயரில் "186F" என்று எதற்க்காக வைத்தார்கள் என்ற விவரம் தெரிந்தால் சொல்லுங்கள்...

    ReplyDelete
  2. கெப்ளர் space Telescope கண்டுபிடித்த 186வது நட்சத்திரத்தின் 5வது கோள் என்பது அதன் பெயர் காரணமாகும்

    ReplyDelete
    Replies
    1. Ashok J சார் நன்றி...F என்பது வரிசையையா அல்லது வேறு ஏதாவது பெயரை குறிக்கிறதா...வரிசை என்றால் 5வது கோளுக்கு E தானே வரும்...

      Delete
    2. ஆமாம் உங்கள் சந்தேகம் சரி தான் அது 5வது அல்ல 6வது தான், அது மட்டும் அல்லாது கெப்லர் தொலைநோக்கி கண்டுபிடிக்கும் ஆயிரக்கணக்கான கோள்கள் பல்வேறு சோதனைளுக்கு பின் வடிகட்டப்பட்டு பூமி போன்ற உயிர் வாழ தகுதியான கிரகம் கண்டுபிடிக்கப்பட்டு பெயரிடப்படுகிறது...

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி