வி.ஐ.டி., நுழைவுத்தேர்வு முடிவுகள் மே 1ம் தேதி வெளியீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 28, 2014

வி.ஐ.டி., நுழைவுத்தேர்வு முடிவுகள் மே 1ம் தேதி வெளியீடு.


வி.ஐ.டி., பல்கலை நடத்திய பொறியியல் நுழைவுத் தேர்வின் முடிவுகள், மே 1ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இம்முடிவுகள், ஏப்ரல் 28ம் தேதி வெளியாகும் என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இப்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.அத்தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் மெரிட் பட்டியல் வெளியிடப்படும்.

மாணவர்கள், தங்களுக்கான முடிவுகளை ஆன்லைன் மூலமாக மட்டுமே தெரிந்துகொள்ள முடியும்.மாணவர்கள் பெற்ற ரேங்க் விபரங்கள், ஏற்கனவே மாணவர்களால் வழங்கப்பட்ட எண்ணில், விண்ணப்ப செயல்பாட்டின்போது, SMS மூலமாக, அவர்களுக்கு தெரிவிக்கப்படும். நுழைவுத்தேர்வு மதிப்பெண்களை மறுகூட்டல் செய்யுமாறு கோரவோ, மறு கிரேடு செய்யுமாறு கோரவோ அல்லது விடைத்தாள்கள் சரியாக திருத்தப்பட்டுள்ளதா என்பதை சரிபார்ப்பதற்காக அவற்றை வழங்கும்படி கோரவோ, எந்த விதிகளும் கிடையாது.ரேங்க் வெளியிடும் செயல்பாடு, மே 19ம் தேதி தொடங்கி, மே 22ம் தேதி வரை நடைபெறும். மொத்தம் 1 லட்சத்து 93 ஆயிரத்து 790 மாணவர்கள் இந்த நுழைவுத்தேர்வை எழுதினர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி