குரூப்–2 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு கலந்தாய்வு 50 சதவீதம் பேர் வரவில்லை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 29, 2014

குரூப்–2 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு கலந்தாய்வு 50 சதவீதம் பேர் வரவில்லை.


தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அரசுப்பணிகளில் காலியாக உள்ள இடங்களை தேர்வு வைத்து நிரப்பி வருகிறது.
அதன்படி கடந்த 2012–ம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற குரூப்–2 தேர்வின் முடிவுகள் வெளியிடப்பட்டு 2 கட்டமாக கலந்தாய்வு நடத்தப்பட்டு உள்ளன. அதன் மூலம் 941 இடங்கள் நிரப்பப்பட்டு விட்டன.

நேற்று 170 இடங்களை நிரப்ப சான்றிதழ் சரிபார்த்தல் மற்றும் கலந்தாய்வுக்கு 197 பேர் அழைக்கப்பட்டிருந்தனர். ஆனால் அவர்களில் 96 பேர்கள் மட்டுமே வந்திருந்தனர்.
101 பேர் வரவில்லை.ஏன் இவ்வளவு பேர் வரவில்லை என்று கேட்டதற்கு தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய அதிகாரி ஒருவர் கூறுகையில் வராதவர்கள் பலர்,ஏற்கனவே அரசுப்பணியில் இதை சம்பளம் அதிகமாக வாங்கிக்கொண்டிருப்பார்கள்.அதனால் இந்த பதவி எதற்கு என்று வராமல் இருந்து இருக்கலாம் என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி