மீண்டும் உயிர் பெறுகிறது இரட்டைப்பட்டம் வழக்கு. மே-2ல் உச்சநீதி மன்றத்தில் தாக்கல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 29, 2014

மீண்டும் உயிர் பெறுகிறது இரட்டைப்பட்டம் வழக்கு. மே-2ல் உச்சநீதி மன்றத்தில் தாக்கல்


இரட்டைப்பட்டம் செல்லாது என சென்னை உயர்நீதி மன்ற அமர்வு வழங்கிய தீர்ப்பை எதிர்த்து இரட்டைப்பட்டம் பயின்றவர்கள் நாட்டின் கடைசி நீதி மன்றமான உச்ச நீதி மன்றத்தை நாடியுள்ளார்கள்.
இது சம்பந்தமாக வழக்கினை மே-2ல் தாக்கல் செய்ய உள்ளனர். இதில் சிறப்பு விடுவிப்பு மனுவினை தாக்கல் செய்ய உள்ளனர். தங்களுக்கு நீதி கிடைக்கும் வரைதாங்கள் ஓயப் போவதில்லை எனவும் சூளுரைத்தனர். மேலும் நாங்கள் யார் பதவி உயர்வையும் கெடுக்க நினைக்க வில்லை. எங்களுக்கு பறிபோன பதவி உயர்விற்காகவும், நாங்கள் படித்த படிப்பினை மதிப்புள்ளதகவும் மாற்றவே நாங்கள் சட்ட ரீதியான முயற்சியினை மேற்கொண்டுள்ளோம் என அவ்வழக்கின் பெறுப்பாளர்கள் தெரிவித்தனர்.

தங்களைப்பற்றி அவதூறு செய்திகள் பரப்புவர்களுக்கு உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பு சரியான பதிலடியாக இருக்கும் என நம்மிடம் தெரிவித்தனர். தேர்தல் முடிவிற்கு பின்னால் பொது மாறுதல் கலந்தாய்வு நடக்க இருக்கும் சூழலில் இவ்வழக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி