30 லட்சம் மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்க டெண்டர். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 29, 2014

30 லட்சம் மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்க டெண்டர்.


அரசு பஸ்களில் பயணிக்கும், 30 லட்சம் மாணவர்களுக்கான இலவச பஸ் பாஸ் தயாரிக்கும் பணிக்கு, இந்திய சாலை போக்குவரத்து நிறுவனமான, ஐ.ஆர்.டி., சார்பில், டெண்டர் கோரப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் உள்ள, எட்டு போக்குவரத்து கழகங்கள் சார்பில், 22 ஆயிரம் பஸ்கள் இயக்கப்படுகின்றன. அரசு பள்ளிகளில், 1ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்கள்; அரசு கல்லூரிகள் மற்றும் பாலிடெக்னிக் மாணவர் களுக்கு, ஆண்டுதோறும், இலவச பஸ் பாஸ் வழங்கப்படுகிறது.மாணவ, மாணவியரின் புகைப்படத்துடன் கூடிய, "ஸ்மார்ட் கார்டாக' பஸ் பாஸ் வழங்கப்படுகிறது. வரும் கல்வி ஆண்டில், 30 லட்சம் மாணவர்களுக்கு பஸ் பாஸ் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.இதை தயாரிக்கும் பணிக்காக, ஐ.ஆர்.டி., சார்பில், டெண்டர் கோரப்பட்டுள்ளது. டெண்டரில் பங்கேற்க, மே, 13ம் தேதி கடைசி நாள்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி