தமிழகத்தில் 72.83% வாக்குப்பதிவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 24, 2014

தமிழகத்தில் 72.83% வாக்குப்பதிவு.


மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது.
தமிழகத்தில் 72.83 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளன.

இன்னும் சில இடங்களில் வாக்குப்பதிவு விபரம் வராததால், முழுமையான விவரம் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தெரிவித்தார்.தமிழகம், புதுச்சேரியில் மொத்தமுள்ள 40 தொகுதிகளிலும் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது.ஒரு சில மையங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஏற்பட்ட கோளாறால், தாமதம் ஏற்பட்டது.காலை முதலே பொதுமக்கள் ஏராளமானோர் ஆர்வமுடன் வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர்.

குறிப்பாக முதன்முறை வாக்காளர்களான இளைஞர்கள், தங்களது வாக்குகளை செலுத்த ஆர்வம் காட்டினர். புதுச்சேரி மக்களவை தொகுதியில் சுமார் 9 லட்சம் பேர் வாக்களிக்க ஏதுவாக தொள்ளாயிரத்து ஐந்து வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.இதே போன்று, சென்னை ஆலந்தூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கும் இடைத் தேர்தல் நடைபெற்றது. பதிவான வாக்குகளை எண்ணும் பணி மே 16-ந் தேதி நடைபெறுகின்றன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி