பார்வையற்றோர் வாக்களிக்க புதிய இயந்திரங்களில் சிறப்பு ஏற்பாடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 19, 2014

பார்வையற்றோர் வாக்களிக்க புதிய இயந்திரங்களில் சிறப்பு ஏற்பாடு.


2013-ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட இந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பல்வேறு புது வசதிகள் இடம் பெற்றுள்ளன. இதன்படி, வாக்குப்பதிவு தொடங்கும் நேரம், முடிக்கும் நேரம்,
ஒவ்வொரு வேட்பாளரும் வாக்குப் பதிவு செய்யும் நேரம் என அனைத்தும் பதிவாகும் வசதி இந்த வாக்குப்பதிவு இயந்திரங்களில்செய்யப்பட்டுள்ளன.இதுதவிர, வாக்களிக்கும் பொத்தானுக்கு அருகே கைகளால் தடவிப் பார்த்து அந்த பொத்தானின் வரிசை எண்ணை அறிந்து கொள்ள வசதியாக பார்வையற்றோர் பயன்படுத்தும் புள்ளிகள் பொறிக்கப்பட்டுள்ளன. இந்த புள்ளிகளைக் கொண்டு பார்வையற்றோர் யாருடைய உதவியுமின்றி வாக்களிக்க முடியும்.இந்த வசதி பழைய வாக்குப் பதிவு இயந்திரங்களில் இல்லாததால், பார்வையற்றோர் வாக்களிக்க தனியாக ஸ்டிக்கர் ஒட்டப்பட்டன. ஆனால், தற்போது வரப்பெற்றுள்ள இந்த புதிய வாக்குப் பதிவு இயந்திரங்களிலேயே அந்த வசதி சேர்க்கப்பட்டுள்ளது.

மேலும், பழைய வாக்குப்பதிவு இயந்திரங்களை வாக்குப்பதிவுக்கு தயார் படுத்த ஊழியர்கள் அதற்கானப் பணிகளைச் செய்ய வேண்டும். ஆனால், புதிய வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஒரு பட்டனை அழுத்தினால் சில நிமிடங்களில் தானாக சுயபரிசோதனை செய்து கொண்டு தேர்தல் பணிக்கு தயாராகவிடும் வகையில் இந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் பிரிவு அலுவலர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி